மின் வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
admin - 0
மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழ்நாடு மின்வாரிய அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்கத்தின் தலைவர் டி.மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து, செய்தியாளர்களிடம் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் கள ஊழியர்களுக்கான 32...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்த தனிப்படை போலீஸார் தாக்கியதில் மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் கடந்த ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை நடத்தி, ஜூலை 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 2-ம் தேதி...
மதுரை மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள், 2 நிலை குழு தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெற்ற அமைச்சர் குழு
admin - 0
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு தொடர்பாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து திமுக மண்டலத் தலைவர்கள் வாசுகி (மண்டலம்-1), சரவண புவனேஷ்வரி (மண்டலம்-2), பாண்டிச்செல்வி (மண்டலம்-3), முகேஷ் சர்மா (மண்டலம்-4), சுவிதா (மண்டலம்-5) ஆகிய 5 பேரிடமும்...
நாளை நடைபெறும் நாடுதழுவிய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வேண்டுகோள்
admin - 0
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (ஜூலை 9) நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது: சென்னையில் நிர்வாகிகளுடன் அன்புமணி போட்டி கூட்டம்
admin - 0
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று (ஜூலை 8) கூடுகிறது. இக்கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் இக்கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் பாமக பிளவுபட்டு உள்ளது. இரு...
அஜித்குமார் விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல்: பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு
admin - 0
தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரிடம், நகை திருட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன்குமார் ஆகியோரை போலீஸார் தாக்கியுள்ளனர். பின்னர் நவீன்குமாரை விட்டுவிட்டு, அஜித்குமாரை...
தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்புவனம் அஜித்குமார் உயிரிழப்பில் பெரும் மர்மம் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி யார்? முழுமையான விசாரணை மூலம் இந்த மர்மங்களுக்கு விடைகாண வேண்டும்.மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாகா மற்றும்...
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரம்: மேட்டுப்பாளையத்தில் இன்று பழனிசாமி தொடக்கம்
admin - 0
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி ரோடு ஷோ நடத்தும் அவர் பல்வேறு இடங்களில் மக்களிடம் பேசுகிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை இன்று தொடங்குகிறார். காலை 9 மணிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டியில்...
ஏழை மாணவர் விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
admin - 0
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான் திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான கருதுகோள்கள்! இத்தகைய சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியைத்தான் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்ற...
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை 10.10 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 65 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 70 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓட தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து, விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திய விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்....









