ஜெ.வின் தம்பியாக பணியாற்றியவன் நான்; அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே விமர்சிக்கிறேன் – திருமாவளவன் கருத்து
admin - 0
அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே அவர்களது கூட்டணி குறித்து விமர்சிக்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் இருந்து நான் வெளியேறியபோது, ‘‘தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க’’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை வாழ்த்தினார். அவருக்கு தம்பியாக களத்தில் நான் பணியாற்றியது அதிமுக தலைவர்களுக்கு தெரியும். பாஜகவால் அதிமுகவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறியாமல் இருக்கிறார்.
அதிமுக - பாஜக...
தனியார் மயமாக்கல், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரி ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
admin - 0
மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எஸ்ஆர்எம்யு, டிஆர்இயு, எஸ்ஆர்இஎஸ் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார்மயமாக்கல், பெரு (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய வேலை நிறுத்தம் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக,...
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்
admin - 0
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.
அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர்...
பராமரிப்புப் பணிகள் காரணமாக மெரினா நீச்சல் குளம் நாளை முதல் ஜூலை 31 வரை இயங்காது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நீச்சல்குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டண அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்கு தடையின்றி இயங்க ஏதுவாக, 135 மீ குழாய் அமைத்தல், 1.80 மீ. விட்டம்...
திருவாரூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு: ரோடு ஷோ சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
admin - 0
திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக நேற்று பிற்பகல் திருவாரூர் வந்தார்.
காட்டூர் கலைஞர் கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின்னர் அங்குள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, பவித்திர...
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க 2023 அக்டோபர் 31-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதன்படி...
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை நடத்தி வருகிறது. தொலைதூரக்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு செமினார் வகுப்புகள் நடத்துவதற்கும், பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடர்பான இதர பணிகளைக் கவனிப்பதற்கும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் நடந்த பல்கலைக்கழக நிதிக்குழு கூட்டத்திலும், தொடர்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்திலும், இந்த பேராசிரியர்களை, ஆசிரியர்...
சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்த மாக பல கோடி ரூபாய் மதிப்புள்ளநிலம் உள்ளது. காமராஜர் அரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை கடந்த 1996-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
அதன்பிறகு அந்த நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட அந்த நிலத்தை பராமரிப்பது தொடர்பாக ஆட்சேபமில்லா சான்று வழங்கப்படாததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தனியார் நிறுவனத்துடன்...
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில் டைனமிக் கட்டண முறையை நீக்க ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் அமைப்பு மனு
admin - 0
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட விரைவு ரயில்களில் டைனமிக் கட்டண முறையை நீக்கக் கோரி, ரயில்வே அமைச்சருக்கு அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் மனு அளித்தனர். புதுடெல்லியில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பு (ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் அமைப்பு) நிர்வாகிகள் அண்மையில் சந்தித்து, பிரீமியம் ரயிலில் டைனமிக் கட்டண முறையை நீக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக...
மத்திய வெளியுறவு துறை அமைச்சக முயற்சியால் ஈரானில் சிக்கிய 15 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்
admin - 0
ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 15 பேர் மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அனைத்து செலவுகளையும் தமிழக பாஜக ஏற்றுள்ளதாக தெரிவித்தார். ஈரானில் சிக்கித் தவித்த தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டனர்.
ஈரானிலிருந்து கப்பலில்...










