பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராக பணியாற்றி வந்த நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடுமறையும் முன்பே, மீண்டும்...
மதிமுக கூட்டத்தில் ஊடகத்தினர் மீது தாக்குதல்: கேமராவை பிடுங்கி உடையுங்கள் என வைகோ ஆவேசம் – கட்சித் தலைவர்கள் கண்டனம்
admin - 0
சாத்தூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் காலி இருக்கைகளை படம் பிடித்த ஊடகத்தினரை “கேமராவை பிடுங்கி உடைத்துப் போடுங்கள்” என ஆவேசத்துடன் வைகோ உத்தரவிட்டார். தொடர்ந்து ஊடகத்தினரை கட்சியினர் தாக்கினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் துரை வைகோ எம்.பி. பேசி முடித்ததும், சென்னை...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பழனிசாமி, பொதுமக்களிடையே பேசியதாவது: ஃபெஞ்சல் புயலை தமிழக அரசு முறையாக எதிர்கொள்ளாததால் விழுப்புரம் நகரமே தண்ணீரில் மிதந்தது.
அதிமுக ஆட்சியில் 2 முறை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை...
நிதி நிறுவன மோசடி வழக்கில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருடைய சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6...
பாமக-வன்னியர் சங்க தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: ஐந்து வயது குழந்தைபோல நான் உள்ளதாக ஒருவர் (அன்புமணி) கூறினார். அந்தக் குழந்தைதான் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தலைவராக்கியது. தந்தை சொல்மிக்கமந்திரம் இல்லை.
எனவே, என் பேச்சை கேட்கவில்லை என்பதால், அவர் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது. எனது இனிஷியலை வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்...
வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு குறித்து துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வேதனை தெரிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் அண்மையில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் முடித்து வைக்கப்பட்டது.
இருப்பினும் அது தொடர்ந் ததாகவே தெரிகிறது. இது பொதுச்செயலாளர் வரை மீண்டும் சென்ற நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி...
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கப்பெருமாள்கோவில் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 12 மின்சார ரயில்களின் சேவையில் இன்று (11-ம் தேதி) மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு இன்று...
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூலை மாதத்துக்கான மாதாந்திர பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை (ஜூலை 12) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம்...
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதன் நிர்வாக குழு சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, 2025 மே மாதம் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்த...
கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கோவை மாவட்டம் வடவள்ளியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, “தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா, இல்லையா என்ற முகவரியே இல்லை’’ என்று விமர்சித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சொந்தமாக...










