நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.
கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா...
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட எல்லைப பாதுகாப்புப் படை வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு
admin - 0
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் (பிஎஸ்எஃப்) இந்தியாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக சென்று பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்தபோது, பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர். எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை...
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா
admin - 0
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஹர்ஷ் கோயங்கா கூறியுள்ளதாவது:
இந்தியர்கள் அதிக அளவில் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதனால் அந்த நாடுகளுக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடியை இந்தியர்கள் சுற்றுலாவுக்கு செலவழித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டு ‘பர்கவஸ்த்ரா’ வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்காக சோலார் டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (எஸ்டிஏஎல்) என்ற உள்நாட்டு நிறுவனம் குறைந்த செலவில் ட்ரோன் எதிர்ப்பு ராக்கெட் குண்டுகளை உருவாக்கியது. இது ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ராக்கெட் குண்டுகள் கோபால்பூரில் நேற்று முன்தினம் 3 முறை பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ராணுவத்தின்...
ஜம்மு காஷ்மீர் எல்லையில் மக்களின் பாதுகாப்புக்காக கூடுதல் பதுங்கு குழிகள் அமைக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அதல் துலோ தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது காஷ்மீர் எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் படை பீரங்கி மற்றும் துப்பாக்கிகளால் தொடர் தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை கிராமங்களில் வசித்த பலரது வீடுகள் சேதம் அடைந்தன. கால்நடைகள் இறந்தன. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு...
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஜம்முவைச் சேர்ந்த 11 வயதான இரட்டையர்கள் உயிரிழந்தனர். பிறக்கும்போது இரட்டையர்களாக பிறந்த இவர்கள், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ரமீஸ். இவரது மனைவி உர்ஷா. இவர்களுக்கு உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இவர்கள் இருவரும் 5 நிமிட இடைவெளியில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல்...
கடந்த 8 ஆண்டுகளாக எடுத்த கடும் நடவடிக்கையால் உத்தர பிரதேசத்தில் 142 ஸ்லீப்பர் செல்கள் ஒழிப்பு
admin - 0
தீவிரவாதிகளுக்கு உதவ உளவாளிகளாக செயல்படுபவர்களை ‘ஸ்லீப்பர் செல்கள்’ என்கின்றனர். இவர்கள் கிராமம், நகரங்களில் சாதாரண பொதுமக்கள் போல் ஊடுருவி வாழ்கின்றனர். இவர்களில் படிப்பறிவு இல்லாதவர்கள் முதல் அனைத்து வகைப் பிரிவினரும் உள்ளனர்.
இந்த ஸ்லீப்பர் செல்கள் மூலம் தீவிரவாதிகள் பல்வேறு உதவிகளை பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் ஊடுருவி இருந்த 142 ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து மாநில அரசு ஒழித்துள்ளது.
இவர்கள் உருவாக்கிய போலி...
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர சட்ட மேலவை துணைத் தலைவர் ஜகியா கசம் நேற்று பாஜகவில் இணைந்தார். விஜயவாடாவில் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி முன்னிலையில் இவர் அக்கட்சியில் இணைந்தார்.
நிகழ்ச்சியில் புரந்தேஸ்வரி பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் ஜகியா இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
ஜகியா கசம் பேசுகையில், “ஒவ்வொருவருக்கும் சம உரிமையை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தியுள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு நம்பிக்கை அளித்த ஒரே...
ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மையத்தில், ‘நீலப் பொருளாதாரத்தில் மீன்வளத் துறையின் பங்கு’ என்ற தேசிய அளவிலான 5 நாள் பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இதை நேற்று முன்தினம் தொடங்கி வைத்த தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் (என்ஐஓடி) இயக்குநர் பாலாஜி...
இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாக். விமான படையின் 20% உள்கட்டமைப்புகள் நாசம்
admin - 0
பாகிஸ்தான் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அந்நாட்டு விமானப் படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள், போர் விமானங்கள் நாசமடைந்துள்ளன. அத்துடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உட்பட 50 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த...










