Google search engine
மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த...
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வரும் ஜூன் 8-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார். உத்தர பிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா (40). இந்திய விமானப்படை விமானியான அவர், இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்காக ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் அவர் சிறப்பு பயிற்சி பெற்றார். இந்த சூழலில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான...
பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் (ஐஏஇஏ) கூறியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து ஐஏஇஏ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை" என்றார். முன்னதாக, பாகிஸ்தானில் அணுசக்தி அமைப்புகள் அமைந்திருக்கும்...
காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர், இது காஷ்மீரின் சுற்​றுலா துறைக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்​படுத்​தி​யது. அதன்​பின் காஷ்மீர் செல்ல வேண்​டாம் என்று அமெரிக்கா உட்பட சில நாடு​கள் தங்​கள் நாட்டு மக்​களுக்கு அறி​வுறுத்​தி​யது. இதனால் பெரும்​பாலான உணவு மற்​றும் தங்​கும் விடு​தி​கள், விருந்​தினர் மாளி​கைகள் மற்​றும் படகு வீடு​கள் காலி​யாகி​விட்​டன. அனைத்து வகை தங்​கும் விடு​தி​களில் சுமார்...
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இவர்களுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா அருகே உள்ள நாதர் ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போகு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு...
மணிப்​பூரின் சந்​தேல் மாவட்​டத்​தில் அசாம் ரைபிள்ஸ் படை​யுடன் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் 10 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் ராணுவத்​தின் கிழக்கு படைப்​பிரிவு வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்​தியா - மியான்​மர் எல்​லைக்கு அரு​கில், மணிப்​பூரின் சந்​தேல் மாவட்​டம், நியூ சாம்​தால் கிராமத்​தில் ஆயுதமேந்​திய நபர்​களின் நடமாட்​டம் இருப்​ப​தாக புதன்​கிழமை உளவுத் தகவல்​கள் கிடைத்​தன. இதன் அடிப்​படை​யில் அசாம் ரைபிள்ஸ் படை​யினர் அங்கு விரைந்து சென்று தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். இதில்...
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை விமர்சித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத் ட்வீட் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார். “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிம் குக் வசம் ட்ரம்ப் சொன்னது...
பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை. தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர்...
 அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை பூஜ்யமாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய நிலையில், அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தோஹாவுக்கு சென்றுள்ள ட்ரம்ப் அங்குள்ள தொழிலதிபர்கள் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது முதலாவதாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் ஆலையை தோஹாவில்...
நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களை திருப்பி அனுப்பும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, எந்தவித சட்டப்பூர்வமான ஆவணங்களும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் தங்கியிருந்த வங்க தேசத்தவர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானங்கள்...