Google search engine
திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாமிசம், மதுபானம், சிகரெட், போதைப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் திருப்பதி அலிபிரி பாதாலு மண்டபம் அருகே, தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான ராமசாமி, சரசம்மாள் ஆகியோர் துப்புரவு தொழிலாளர்களுடன் அமர்ந்து மாமிச உணவை சாப்பிட்டுள்ளனர். இதனை அப்பக்கம் நடந்து செல்லும் பக்தர் கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை கண்டித்தனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டதால், அதனை வீடியோ எடுத்து...
உலகள​வில் ஏற்​படும் மரணங்​களில் நான்​கில் 3 பங்கு நாள்​பட்ட நோய்​களால் ஏற்​படு​கிறது. இதில் பெரும்​பாலானவற்றை வாழ்க்கை முறை மாற்​றம், குறித்த நேரத்​தில் பரிசோதனை மற்​றும் சிகிச்​சை, தடுப்​பூசிகள் போன்ற முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மூலம் தடுக்க முடி​யும் என மருத்​துவ நிபுணர்​கள் கூறுகின்​றனர். இதுகுறித்து உலகின் முன்​னணி மருத்துவ நிறு​வன​மான ஜிஎஸ்​கே.​வின் மருத்​துவ இயக்​குநர் மற்​றும் அதி​காரி​கள் கூறுகை​யில், ‘‘வயது வந்தவர்களுக்கு இன்​பூளுயன்​சா, சுவாச நோய் தொற்று (ஆர்எஸ்​வி), அக்​கி, அம்​மை,...
உல​கின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படு​கிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்​ளது. தெற்​காசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு நாட்​டுக்​கும் வெவ்​வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யம் உள்​ளது. என்​றாலும் இந்த நாடு​களிடையே பொது​வான விஷய​மாக அரிசி உள்​ளது. ஒவ்​வொரு நாடும் தனித்​து​வ​மான அரிசி வகைகளை உற்​பத்தி செய்​கின்​றன. இவை பெரும்​பாலும் எல்​லோ​ராலும் வாங்​கக் கூடிய விலை​யிலேயே கிடைக்​கின்​றன. என்​றாலும் ஜப்​பானின் கின்​மேமை...
சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தனி​யார் நிலக்​கரி சுரங்​கம் அமைப்​பது தொடர்​பான கருத்து கேட்பு கூட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் என ஆயிரக்​கணக்​கான பழங்​குடி​யின மக்​கள் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தரம்​ஜாய்​கர் என்ற பகுதி உள்​ளது. இங்​குள்ள புரங்கா கிராமம் அருகே அதானி நிறு​வனம் நிலக்​கரி சுரங்​கம் அமைக்​க​வுள்​ளது. இதற்கு இப்​பகு​தி​யைச் சேர்ந்த பழங்​குடி​யின மக்​கள் எதிர்ப்பு தெரி​விப்​ப​தால், அவர்​களிடம்...
டெல்​லி​யில் உறுப்​பு​களை தானம் செய்​வதற்​காக இறந்த பெண்​ணின் உடலில் மீண்​டும் ரத்த ஓட்​டத்தை கொண்டு வந்து மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர். டெல்லி துவாரகா பகு​தியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்​பியல் கோளாறு காரண​மாக பக்​க​வாதம் ஏற்​பட்டு படுத்த படுக்​கை​யாக இருந்​தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. இதையடுத்து துவார​கா​வின் எச்​சிஎம்​சிடி மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் கீதாவை சேர்த்​தனர். அங்கு அவருடைய உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​தது. அவர்...
 பிஹார் மாநிலத்​தில் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் 60 சதவீதத்​துக்​கும் மேல் உள்​ளனர். ஆனால், பாஜக போட்​டி​யிடும் 101 தொகு​தி​களில், 49 வேட்​பாளர்​கள் முற்பட்ட வகுப்​பினர். இதை ஈடு​செய்ய தே.ஜ. கூட்​ட​ணி​யில் உள்ள ஐக்​கிய ஜனதா தள கட்​சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்​பாளர்​களை அதி​கம் நிறுத்​தி​யுள்​ளது. இக்​கட்​சி​யில் 22 வேட்​பாளர்​கள் மட்​டுமே முற்​பட்ட வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள். இங்கு காங்​கிரஸ் கட்​சி​யில் 33, ஆர்ஜேடியில் 16...
உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார். உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆகி​விட்​டது. இதன் வெள்ளி விழாவை முன்​னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்​கும் மேற்​பட்ட திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். ரூ.7,210 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இவற்​றில் குடிநீர் , நீர்ப்​பாசனம், தொழில்​நுட்​பக் கல்​வி, எரிசக்​தி, நகர்ப்​புற...
மத்​திய பிரதேசத்​தின் பச்​மரி நகரில் காங்​கிரஸ் நிர்​வாகி​களின் பயிற்சி முகாம் நேற்று நடை​பெற்​றது. இதில் அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்​றார். முன்​ன​தாக பச்​மரி சரணால​யத்தை அவர் பார்​வை​யிட்​டார். திறந்த ஜீப்​பில் சரணால​யம் முழு​வதும் சபாரி சென்றார். இதுகுறித்து பச்​மரி சரணாலய துணை இயக்​குநர் சஞ்​சீவ் சர்மா கூறும்​போது, “ராகுல் காந்தி பட்​டாம்​பூச்சி பூங்​கா​வில் சிறிது நேரம் தங்​கி​யிருந்​தார். ஜீப்​பில் சென்​ற​போது சில வகை மான்​களை அவர்...
ம.பி.​யில் போலீஸ் பயிற்சி காவலர்​களுக்​கு, ராம்​சரித​மானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடு​தல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்​தர​விட்​டுள்​ளார். ம.பி.​யில் போலீஸ் காவலர் பணிக்கு புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சுமார் 4,000 இளைஞர்​கள் மற்​றும் பெண்​களுக்கு கடந்த ஜூலை முதல் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. ம.பி.​யின் 8 பயிற்​சிக் கல்​லூரி​களில் 9 மாதங்​களுக்​கான இந்​தப் பயிற்​சியை கூடு​தல் டிஜிபி (பயிற்​சி) ராஜா பாபு சிங் கடந்த ஜூலை​யில் தொடங்கி வைத்​தார். அப்​போது...
கர்​நாட​கா​வில் கரும்​புக்கு வழங்​கப்​படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்​தக்​கோரி கடந்த 8 நாட்​களாக விவ​சா​யிகள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற‌னர். பெல​காவி மாவட்​டத்​தில் நேற்று ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேசிய நெடுஞ்​சாலையை மறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்​லு​மாறு கூறிய​தால் இரு தரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதனிடையே விவ​சா​யிகளில் சிலர் அங்​கிருந்த போலீ​ஸாரின் மீதும், வாக​னங்​களின் மீதும் கல்​வீசி தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து போலீ​ஸார்...