குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை
admin - 0
பிஹார் தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இத்தோல்வி அவரது குடும்பத்தையும் பாதித்துள்ளது.
லாலுவுக்கு சிறுநீரகம் தானம் செய்தவரும் அவரது இரண்டாவது மகளுமான ரோகிணி ஆச்சார்யா, தனது தம்பி தேஜஸ்வியின் கூட்டாளிகளால் தாம் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.
இதற்கு முன் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கடந்த மே மாதம் கட்சியில் இருந்தும் குடும்பத்தில்...
டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது
admin - 0
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர்,...
கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு
admin - 0
சபரிமலையில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்பாட் புக்கிங்கில் கட்டுப்பாடின்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால்...
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரோகிணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘லாலுவின் பெயரில் போலி அனுதாபம் காட்டுவதை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளில் உள்ள லட்சக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு தங்களது சிறுநீரகங்களை தானம் செய்ய அவர்கள் முன்வர வேண்டும். லாலு மீது அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால்,...
முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். இது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சசி தரூர் எக்ஸ் தளத்தில் நேற்று கூறியதாவது:
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அழைப்பின் பேரில் நான் பங்கேற்றேன். அதில் பேசிய பிரதமர்...
மாவோயிஸ்ட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தேடுல் வேட்டைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தில் போலீஸார் முன்னிலையில், 2 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ஜி என்ற பிரஜேஷ் யாதவ். இவர் மாவோயிஸ்ட் அமைப்பில் துணை மண்டல கமாண்டராக இருந்தார்....
டெல்லி செங்கோட்டையில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ”கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் முஜம்மிலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக, அவர் தாக்குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை ஆய்வு...
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், புல்வாமாவைச் சேர்ந்த முஜம்மில், லக்னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்காமை சேர்ந்த ஆதில், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், நகர் மகாராஜா ஹரிசிங் மருத்துவமனை டாக்டர் தஜமுல் ஆகிய 6 மருத்துவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஹரியானாவில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த...
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா நகரில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 41 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் பாருக்கின் (என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்) மனைவி அபிரா பிபி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மகளிர் பிரிவான ஜமாத்-உல்-மொமினட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு...
டெல்லியில் குண்டு வெடித்த காருடன் சுற்றிவந்ததாக கருதப்படும் மற்றொரு கார் பரிதாபாத் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை மாலை ஒரு கார் வெடித்துச் சிதறியது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியின் தற்கொலை தாக்குதலாக இது கருதப்படுகிறது. இது தொடர்பாக சுமார் 200 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் குண்டு வெடித்த ஹுண்டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற 'ஈகோ ஸ்பாட்’ காரும் சுற்றி வந்தது...










