பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட பதிவில், “எனது வீட்டுக்கு வந்த சின்னஞ்சிறு நண்பனுடன்...” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.
பிரதமர் மோடியுடன் இருக்கும் சின்னஞ்சிறு நண்பன் யார் என்ற கேள்வி அனைவரையும் துளைத்தெடுத்தது. நீண்ட தேடலுக்குப் பிறகு அந்த சிறுவன் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகரும் பாஜக மூத்த தலைவருமான கிருஷ்ணகுமாரின் பேரன் நியோம் என்பது தெரியவந்துள்ளது....
பிரதமர் மோடி நேற்று அரசுப் பதவியில் 8,931 நாட்களைப் பூர்த்தி செய்து, இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன்பு சிக்கிம் மாநில முதல்வராக 24 ஆண்டுகளுக்கும் மேலாக (8,930 நாட்கள்) பதவி வகித்த பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 7, 2001 முதல் மே 21, 2014 வரை தொடர்ந்து...
டெக்சாஸில் இருந்து 47,000 டன் காஸ் இந்தியா வந்தது; ரஷ்யாவில் இருந்து 7 கப்பல்களில் கச்சா எண்ணெய் வருகிறது
admin - 0
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்பல் நேற்று கர்நாடகாவின் மங்களூருக்கு வந்து சேர்ந்தது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் இந்தியாவில் சமையல் காஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு ஈரான் ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் ஷிவாலிக் கப்பல், நந்தா தேவி கப்பல்,...
அசாம் பேரவை தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தின்சுகியா மாவட்டத்தின் ஜகுன் பகுதியில் போலீஸ் கமாண்டோ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடம் அசாம் - அருணாச்சலப் பிரதேசம் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் சிலர் கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி, 5 கையெறி குண்டுகளை வீசினர். இதில் 4 போலீஸார் காயம் அடைந்தனர்....
5 ஆண்டில் பொருளாதாரம் ரூ.40 லட்சம் கோடியாகும்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை
admin - 0
மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை மேற்கு வங்கம் கண்டுள்ளது. நாங்கள் எங்கள் பணியின்...
மேற்கு வங்க முதல்வர் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி நேற்று பிரச்சாரம் தொடங்கினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை அவர் பவானிப்பூரில் நேற்று தொடங்கினார். முன்னதாக சக்பெரியா சாலையில் பாஜகவின் தேர்தல்...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று அயோத்தி ராமர் கோயிலில் வழிபட்டார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்தமயி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம யந்திரத்தை அவர் பிரதிஷ்டை செய்தார். பிறகு பால ராமருக்கு ஆரத்தி காட்டி...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ‘தருண் பாரத்’ என்ற மராத்தி நாளிதழின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
சமூக ஊடகங்கள் மக்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டாலும், அவை நல்ல நோக்கங்களுகாகப் பயன்படுத்தப்பட வேண்டும். மீம்ஸ்கள் மற்றும் ரீல்ஸ்கள் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தகவல் தொடர்புத் துறை மூலம் சில உள்ளடக்கங்கள் பரப்பப்படுகின்றன. மேலும் நமது தன்னார்வலர்களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பணிகள்...
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், கிளப்புகள், அரசின் நலத்துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை தொழில் தகராறு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து தொழிற்சாலை என்பதற்கான வரையறையை அளித்தது.
இதனிடையே இதை எதிர்த்து மத்திய அரசும், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநில அரசுகளும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில்...
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அயர்லாந்தின் ஷானன் நகரில் தவித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் வியாழக்கிழமை அதிகாலை தலைநகர் டெல்லியை வந்தடைந்தது.
கடந்த திங்கள்கிழமை, நியூயார்க்கிலிருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியாவின் ‘ஏ350’ ரக விமானம் (AI102), திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அயர்லாந்தின் ஷானன் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது. அங்கு விமானம் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்த 220-க்கும் மேற்பட்ட பயணிகளும் ஊழியர்களும் அங்கேயே தவிக்கும் சூழல்...










