மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, நம் நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.
இதனிடையே, இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தற்போதைய மேற்கு ஆசிய மோதலை அரசு கையாளும் விதத்தை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையில், மாநிலங்களவையில் பேசிய சிபிஐ(எம்) எம்.பி. ஜான் பிரிட்டாஸ், "2003ம் ஆண்டு...
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுக்களுடன் தங்களது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 10 பேர் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர். அவர்கள் யார் என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்) இத்தகவலை தெரிவித்துள்ளது. மூர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவான ஜாஹிர் ஹொசைன் ரூ.67 கோடி மதிப்புள்ள சொத்துகளுடன் முதலிடத்தில்...
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா சுயேச்சை எம்.பி. அப்துல் ரஷீத் ஷேக். பொறியாளரான இவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் கைதாகி சிறையில் உள்ளார்.
இவர் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவியதாகப் புகார்கள் உள்ளன. சிறையிலிருந்தபடி மக்களவை தேர்தலில் வென்ற ரஷீத், நீதிமன்ற அனுமதியுடன் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
அதன்படி, நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று நேற்று அவர் பேசும்போது, "தவறான கொள்கைகளால் இறந்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் சாதாரண...
ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) தேசிய தலைவராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜேடியு மூத்த தலைவர் அனில் ஹெக்டே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது. 23ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 11 மணியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில்,...
உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமடத்தில் உள்ள ஜோதிஷ் பீடத்தின் சங்கராச் சாரியாராக (தலைவர்) அவிமுக்தேஸ்வரானந்த் உள்ளார்.
இப்போது உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் இருக்கும் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மவுனி அமாவாசை அன்று பிரயாக்ராஜ் நகரில் ‘சதுரங்கினி சேனை' என்ற பெயரில் ஒரு படை தொடங்கப்படும். பாரம்பரிய மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்ட இந்தப் படை, பசுக்களையும் இந்துக்களையும் பாதுகாக்கும்.
இதில் அனைத்து இந்து சாதிகளையும் சேர்ந்த ஆண்,...
நாடு முழுவதும் பெட்ரோல், சமையல் காஸ் தடையின்றி விநியோகம் செய்யப்படும். விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் வழங்கப்படும் என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்து உள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை மிகுந்த கவலையளிக்கிறது. 3 வாரங்களுக்கும் மேலாக பிரச்சினை நீடிக்கிறது. இதனால் சர்வதேச...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மாநில கிடங்கு நிறுவனத்தின் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றியவர் ககன்தீப் சிங் ரந்தவா. இவர் கடந்த சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
முன்னதாக அவர் தனது வீடியோ பதிவில் போக்குவரத்து அமைச்சர் புல்லர் தன்னை துன்புறுத்தி வந்ததாக புகார் கூறியிருந்தார். இதையடுத்து முதல்வர் பகவந்த் சிங் மான் கேட்டுக்கொண்டுதற்கு இணங்க புல்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் லால்ஜித் சிங் புல்லர் நேற்று பிற்பகலில்...
குக்கரில் 20 விசில் விட்டாலும் மட்டன் வேகவில்லை என்று குக்கருடன் ஒருவர் நேரடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தாடிபத்திரி எனும் ஊரை சேர்ந்தவர் சோதால ஹாஜி. இவர் நேற்று பரபரப்பாக ஒரு குக்கருடன் தாடிபத்திரி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விவரம் கேட்டனர்.
அதற்கு, நான் ‘ஒரு கடையில் தலைக்கறி எடுத்தேன். அது 20 விசில் விட்டாலும் வேகவில்லை....
உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு தலைமையேற்கும் வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் டி.பிரகாஷ். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பொது நிர்வாகத்தில் எம்.ஏ., எம்.பில். பட்டமும் பெற்றார். பேராசிரியர் பணிக்கு முயன்ற இவர், மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வை எழுதினார். அதில் 1994ல் அவரது முதல் முயற்சியிலேயே...
ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டம், ஆள்ளூருபாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வருலு (55). இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்றி, கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கடேஸ்வருலுவின் உடல் நிலை மோசமானதால், அவர் கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். மருத்துவர்கள் கைவிரித்ததால் ஆள்ளூரு பாடு கிராமத்தில் இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உற்றார், உறவினர்கள் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு, ஐஸ் பெட்டியும்...










