ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டம் சூரத்கர் நகரில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. இங்கிருந்து ஜாகுவார் போர் விமானம் நேற்று முன்தினம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. இந்த விமானம் சுருமாவட்டம், பனோடா கிராமத்துக்கு அருகில் திடீரென வயலில் விழுந்து நொறுங்கியது. இதில் விமான பாகங்கள் தீப்பற்றி எரிந்ததில் லோகேந்திர சிங் சிந்து (31), ரிஷி ராஜ் சிங் (23) ஆகிய இரு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களில் லோகேந்திர சிங்,...
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது: நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது....
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்பில் முஸ்லிமாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, பல்ராம்பூரை சேர்ந்த ஜுங்கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நெருங்கிய நண்பர் நீத்து நவீன் ரொஹரா(எ) நஸ்ரின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏடிஎஸ் படையினர்...
ஏமனில் கேரள செவிலியரை காப்பாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
admin - 0
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023-ல் நிராகரிக்கப்பட்டது.
தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை...
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்தியாயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மலையாள நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமல் செய்தார். கடந்த 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை 21 மாதங்கள்...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 2025-ம் ஆண்டு எங்களுக்கு எளிதான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு மற்றும் பின்பு என 2 பகுதிகளாகப் பிரிக்கலாம். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் தற்போது சுற்றுலா மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. மேற்கு வங்க மக்கள் ஜம்மு...
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு தொழிலாளர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ்...
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கேன்டீனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதில் அவருக்கு அறையில் கொண்டுவந்து தரப்பட்ட உணவு கெட்டுப்போய் இருந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கெய்க்வாட், கேன்டீன் சென்று ஊழியர் ஒருவரை சரமாரியாக தாக்கினார். கேன்டீன் ஊழியரை கெய்க்வாட் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி...
நிபந்தனைகளை மீறி ஆயிரக்கணக்கில் குவிந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸார்: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பிப்பு
admin - 0
மாம்பழ விவசாயிகளிடம் குறைகளை கேட்க நேற்று சித்தூர் மாவட்டம் வந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க போலீஸ் நிபந்தனைகளை மீறி ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகமானதால், மாங்காய் மண்டிகளில் மாங்காய்களை மிக குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்க நேரிட்டது. கிலோவுக்கு ரூ.4 மானியம் கொடுப்பதாக ஆந்திர அரசு அறிவித்தும்...
அமெரிக்காவில் ‘பிரேக்கிங் பேட்' என்ற தொலைக்காட்சி தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. அதில், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் போதை மருந்து தயாரிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இதே பாணியில் ராஜஸ்தான் மாநிலம் கங்கா சாகர் மாவட்டம் முக்லவா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மனோஜ் பார்கே (25), போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியர் இந்திரஜீத் விஷ்னோய் ஆகிய இருவரும் போதை மருந்து தயாரித்துள்ளனர்.
ஒரு...










