சக்திவாய்ந்த ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான கடல்சார் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை எவ்விதத் தடையுமின்றி இயக்குவது குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த சக்தி வாய்ந்த ஜி7 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதிலும், தற்போதைய...
மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து உரங்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்காசிய நிலவரம் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் மத்திய அரசு...
ஆந்திராவில் நேற்று காலை டிப்பர் லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம், நிர்மல் பகுதியில் இருந்து தனியார் சொகுசு பேருந்து 41 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. ஆந்திர மாநிலம், மார்க்காபுரம் மாவட்டம், ராயவரம் பகுதிக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்தபோது, பேருந்தை ஒரு டிப்பர் லாரி...
உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம் பகைன் கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோபால் (26). சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பகைன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது. அன்று மாலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. கிராம மக்கள்...
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியின் மணிகர்னிகா மயானத்தில் எரியும் உடல்களுக்கு இடையே இளம் பெண்கள் நடனம் நடைபெற்றது. இரவு முழுவதுமான இந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சி, கடந்த 282 வருடங்களாகத் தொடர்கிறது.
உ.பி.யின் முக்கியப் புனித நகரமாக இருப்பது வாரணாசி. மிகவும் பழமையான நகரமாகக் கருதப்படும் இங்கு பல பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றன. இதில் ஒன்றாக தற்போது துவங்கி நடைபெறும் நவராத்திரி நாட்களில் மயான நடனம் இடம்...
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, தமிழகத்தின் குலசேகர பட்டினத்துக்கு அடுத்ததாக நாட்டின் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம் அருகே அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
குஜராத் சட்டப்பேரவையில் பட்ஜெட் கோரிக்கை குறித்து அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா பேசுகையில், ”ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடம் கிர் சோம்நாத் மாவட்டம் அருகே அரபிக் கடல் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையின் கீழ் செயல்படும்...
மேற்கு ஆசிய நிலவரம் குறித்து ஆலோசிக்க நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மேற்கு ஆசிய நிலவரம் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விரிவான விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து மத்திய...
மக்களவையில் திருநங்கைகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் தென் சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: இது சாதாரண சட்டத் திருத்தம் அல்ல. மனித உரிமை, மரியாதையுடன் வாழும் உரிமை மற்றும் ஒரு சமூகத்தின் இருப்பின் மீது எழுப்பப்படும் கேள்வி. ஒரு நபரின் அடையாளத்தை அரசு தீர்மானிக்க முடியாது.
இது குறித்து திருநங்கை சமூகத்தினரின் கருத்துகள் கேட்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் நல்சா தீர்ப்பின்படி, சுய அடையாளம் என்பது...
மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதி ஒரு காலத்தில் நக்சலைட் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டது. இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்தனர். அரசின் ஆதரவை பெறுவது அவர்களுக்கு கடினமாக இருந்தது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை காரணமாக இப்பகுதி இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது.
இதுவரை கட்சிரோலி பகுதிக்கு அறிமுகமில்லாத ஸ்ட்ராபெர்ரியின் விளைச்சல் இந்த ஆண்டு அதிக லாபத்தை தந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கட்சிரோலியில் உள்ள முல்சேரா,...
பொது சிவில் சட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தியது.
இந்நிலையில், ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ மசோதாவை முதல்வர் புபேந்திர படேல், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இது குறித்து அவையில் தொடர்ந்து 7 மணி நேரத்துக்கு மேல் விவாதம் நடைபெற்றது. அதன்பின் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மத பாகுபாடின்றி திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் இணைந்து...










