Google search engine
 கேரளா​வின் மலப்​புரம் மாவட்​டத்​தில் கோடினி கிராமம் உள்​ளது. அங்கு சுமார் 2,000 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன. பெரும்​பாலும் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் ​காரண​மாக கோடினி கிராமம், இரட்​டையர் கிராமம் என்று அழைக்​கப்​படு​கிறது. இதுகுறித்து கிராம மக்​கள் கூறிய​தாவது: கடந்த 70 ஆண்​டு​களாக எங்​கள் கிராமத்​தில் இரட்டைக் குழந்​தைகள் பிறப்​பது வழக்கமாக இருந்து வரு​கிறது. இரு குழந்​தைகளும் ஒரே மாதிரியாக இருப்​ப​தால் அவர்​களை அடை​யாளம் காண்​ப​தில் பெரும் சிரமங்​கள் ஏற்​படும்....
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.  கொல்​கத்​தா​வின் பிரி​கேட் பரேடு மைதானத்​தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு...
உத்தர பிரதேசம் லக்னோ​வில் 71 வயது முதியவர் ஒருவர் நீட் தேர்வுக்கு விண்​ணப்​பித்து தேர்வு எழு​தி​யுள்​ளார். உத்தர பிரதேசம் லக்​னோவைச் சேர்ந்​தவர் அசோக் பாஹர்​(71). உத்​த​ராகண்​டில் உள்ள இந்​திய மருந்​துள் நிறு​வனத்​தில் (ஐடிபிஎல்) மார்க்​கெட்​டிங் பிரிவு தலை​வ​ராக​வும், வெளி​யுறவுத்​துறை​யில் ஆலோ​சக​ராக​வும் பணி​யாற்றி விருப்ப ஓய்வு பெற்​றுள்​ளார். இவரது மனைவி டாக்​டர். மஞ்சு பாஹர் மகப்​பேறு மருத்​து​வர். அசோக் பாஹரின் தந்​தை​யும் லக்​னோ​வில் பிரபல மருத்​து​வ​ராக இருந்​தவர். அதனால் இவரும் மருத்​து​வ​ராக வேண்​டும்...
கேரளாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனைகள் 24 மணி நேரத்துக்குள் நிறைவடையும் என்ற தகவல் டெல்லியில் இருந்து வந்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் மட்டுமே 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, கேரளாவின்...
 ‘‘ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது, பாகிஸ்தானின் 13 போர் விமானங்​கள், 11 விமானப்படை தளங்களை இந்​தி​யப் படைகள் அழித்​தது’’ என்று விமானப்படை தெரி​வித்​துள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலா பயணி​கள் மீது பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் கடந்த ஆண்டு நடத்​திய தாக்குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதற்கு பதிலடி​யாக இந்​திய ராணுவம் கடந்​தாண்டு மே மாதம் 7-ம் தேதி ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை தொடங்​கியது. இதன் முதலாம் ஆண்டு தினம் நேற்று...
கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறை​யாக பின​ராயி விஜயன் கூறியுள்​ள​தாவது: "கேரளா​வில் 3-வது முறை​யாக ஆட்​சி​யைக் கைப்​பற்​றும் நோக்கில் களம் கண்ட இடது​சாரி முன்​னணிக்கு இந்​தத் தேர்​தல் முடிவு முற்​றி​லும் எதிர்​பா​ராத ஒன்​று. இந்த தோல்வி முழு வியப்பை​யும் பேர​திர்ச்​சி​யை​யும் அளித்​துள்​ளது. தேர்​தல் பின்னடைவை ஒப்​புக்​கொண்டு மக்​கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்​காகத் தொடர்ந்து குரல் கொடுப்​போம். சட்​டமன்​றத்​தில் இடது​சாரி முன்​னணி ஒரு பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சி​யாகச் செயல்​படும். சமூக நலத்...
பஞ்​சாப் மாநிலம் அமிர்​தசரஸ் மற்​றும் ஜலந்​தர் நகரங்​களில் கடந்த 5-ம் தேதி இரவு அடுத்​தடுத்து இரட்டை குண்​டு​வெடிப்​புச் சம்​பவம் நடந்தது. பஞ்​சாப் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், பாஜக திட்​ட​மிட்டு கலவரங்​களை​யும் குண்​டு ​வெடிப்​பு​களை​யும் நிகழ்த்​து​வ​தாக முதல்​வர் பகவந்த் மான் பகிரங்​க​மாகக் குற்​றம்சாட்​டி​னார். இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் தருண் சக், முதல்​வர் பகவந்த் மானுக்கு அனுப்​பி​யுள்ள நோட்​டீஸில், “குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் பாஜக​வுக்கு தொடர்பு இருக்​கிறது...
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலை​வர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர்​ அர்​லேக்​கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது. இது​போன்ற சர்ச்​சைகளின் போது, எஸ்​.ஆர்​.பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க தீர்ப்பே பெரிதும் விவா​திக்​கப்​படு​கிறது. கடந்த 1994-ல் வழங்​கப்​பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்​பில், ஒரு ஆட்​சிக்​குப் பெரும்​பான்மை ஆதரவு உள்ளதா என்​பதை சட்​டப்​பேர​வை​யில்​தான் அறிய முடி​யும். ஆளுநர் மாளி​கை​யில் இல்​லை. பெரும்​பான்மை ஆதரவு...
முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இது தொடர்பாக மம்தா பானர்ஜி கடந்த 5ம் தேதி நிருபர்களிடம் கூறும்போது, “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில்...
கோடை விடு​முறை என்​ப​தால் திருப்​பதி ஏழுமலையான் கோயி​லில் வழக்​கத்​திற்​கும் அதி​க​மாக பக்தர்களின் கூட்​டம் உள்​ளது. அது​வும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்​களும் அரசு விடுமுறை நாட்​கள் என்​ப​தால், கூட்​டம் மேலும் அதி​கரித்​தது. இதனால் கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசை​யில் தரிசனத்​துக்​காக காத்​திருந்​தனர். கோடை காலத்​தில் கூட்​டம் அதி​கரிக்​கும் என்​பதால் கடந்த மே 1-ம் தேதி முதல்...