டெல்லியில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்பூர் ஐஐடியுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்பட்டது. ஆனால் போதுமான ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஐடி கான்பூர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “6 ஆயிரம்...
முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றச்சாட்டு
admin - 0
கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக கர்நாடகா மீது திட்டமிட்டு எதிர்மறை பிம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் சில நிறுவனங்கள் கர்நாடகாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடகாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளது. பன்னாட்டு முதலீட்டாளர்களுடன்...
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அருகில் நிறுத்தப்பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு உருவானது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு விமான நிறுவனங்களுக்கு 'சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ்' என்ற நிறுவனம் பேருந்து சேவை வழங்கி வருகிறது.
இதற்கு சொந்தமான ஒரு பேருந்து நேற்று பிற்பகல் மூன்றாவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்கு அருகில் நின்றிருந்தது. இந்நிலையில் அந்தப் பேருந்து...
உலகளவில் பயணிகள் விமான தயாரிப்பில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவிடம் அனைத்து வளங்கள் இருந்தாலும் பல்வேறு இடையூறுகள் காரணமாக நீண்ட காலமாக பயணிகள் விமான தயாரிப்பை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வந்தது.
ஆனால், இப்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் உள்நாட்டில் பயணிகள் விமான தயாரிப்பை சாத்தியமாக்க உள்ளது. இதற்காக, ரஷ்யாவைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட்...
பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மன்பிரீத் சிங் (27). இவர் கனடாவின் டோரண்டோ நகரில் உள்ள பிராம்ப்டனில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமன்பிரீத் சய்னி என்ற இளம்பெண்ணை கடந்த வாரம் கொலை செய்துள்ளார்.
அமன்பிரீத்தின் உடலை லிங்கனில் உள்ள ஒரு பூங்காவில் இருந்து போலீஸார் கடந்த 21-ம் தேதி கைப்பற்றினர். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை போலீஸார்...
டெல்லியில் நேற்று மேக விதைப்பு நடைமுறை மூலம் செயற்கை மழை பெய்விக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுமானப் பணியின்போது உரிய விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு...
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு
admin - 0
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் ஆண்டுதோறும் புஷ்கர் ஒட்டக கண்காட்சி நடைபெறும். இங்கு பல்வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு புஷ்கர் கண்காட்சியில் ரூ.15 கோடி மதிப்பிலான குதிரை இடம்பெற்றுள்ளது. சண்டிகரை சேர்ந்த கேரி கில் என்பவருக்குச் சொந்தமான இந்த இரண்டரை வயது குதிரைதான் கண்காட்சியில் இடம் பெற்று மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து குதிரையின் உரிமையாளர் கேரி கில் கூறியதாவது: மார்வாரி...
டிமேட் கணக்கில் டிஜிட்டல் மாயம்: ம.பி.யில் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக இருந்த வழக்கறிஞர்
admin - 0
டிஜிட்டல் மாயம் காரணமாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக திகழ்ந்தார்.
மத்தியப் பிரதேசம் தர் மாவட்டம் தாம்நாத் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் டாங்ளே. தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தொடங்கிய டி-மேட் கணக்கில் சில நாட்களுக்கு முன்பு ‘ஹர்சில் அக்ரோ லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் 1,312 பங்குகள் வரவு வைக்கப்பட்டன.
டிஜிட்டல் மாயம் காரணமாக தவறாக கணக்கிடப்பட்டு வந்த...
திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு: உத்தராகண்ட் கிராமத்தில் விதி மீறினால் ரூ.50,000 அபராதம்
admin - 0
உத்தராகண்ட் மாநிலம், ஜான்சர் - பவார் பகுதியில் உள்ளது கந்தார் கிராமம். பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சமீபத்தில், பழங்குடியின தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்க நகைகள் அணிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்கத்தில் கம்மல், மூக்குத்தி, தாலி ஆகியவற்றை மட்டும் அணியலாம். மற்றபடி ஆடம்பரமான தங்க நகைகளை அணிய கூடாது....
சத்தீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியை பாதுகாப்பு படையினர் தீவிரமாக மேற்கொண்டனர். இதன் காரணமாக பல மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மாதத்தின் 3-வது வாரத்தில் மட்டும் 238 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள 13 பெண்கள் உட்பட 21 மாவோயிஸ்ட்கள் போலீஸார் முன்பு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நேற்று சரண் அடைந்தனர்.
இதுகுறித்து பஸ்தார் ஐ.ஜி சுந்தர்ராஜ் கூறும்போது, ‘‘மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டு,...








