குடியுரிமை குறித்து குற்றம்சாட்ட முடியாத ஆதாரங்கள் இருந்தபோதிலும், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வெளிநாட்டவரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டா அல்லது இல்லையா என்ற சட்ட கேள்வியை உச்ச நீதிமன்ற விசாரணையின்போது பிஹார் தேர்தல் ஆணையம் எழுப்பியுள்ளது. பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர் பில்டு ராய் எனும் பிலத் ராய் என்ற பிலத் பிரசாத் யாதவ். 2006-07-ல் நேபாள குடிமகனாக இருந்த அவரிடம் 1996 அக்டோபர்...
நாட்டில் எந்த சக்தியாலும் விவசாயிகளின் குரலை நசுக்க முடியாது. விவசாயிகளின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று மேடையிலேயே மத்திய விவசாயத் துறை அமைச்சரை எச்சரித்துள்ளார் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர். மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மும்பையில் நேற்று (டிச.03) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத்...
6 தொழிலாளர்கள், டாக்டரை கொன்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுனாயித் அகமது பட். இவர் பாகிஸ்தானிலுள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். கஹாங்கீர், கந்தர்பால் பகுதியில் 6 தொழிலாளர்கள், ஒரு டாக்டரை சுட்டுக் கொன்ற வழக்கில் இவரை போலீஸார் தேடி வந்தனர். கடந்த ஓராண்டாக இவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று கந்தர்பால்...
உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் சமீபத்திய வன்முறையை தொடர்ந்து அங்குள்ள நிலைமையை மதிப்பிடுவதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட உ.பி. காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று பயணம் மேற்கொள்கின்றனர். உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் கால மசூதி உள்ளது. இதில் கடந்த 24-ம் தேதி இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கள ஆய்வுக்கு நீதிமன்றம்...
வேலைக்காக துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்ட ஆந்திர இளைஞர்கள் 16 பேரை மீட்க அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், வலசா, வஜ்ரபு கொத்தூரு, சந்தபொம்மாலி, கஞ்சிலி மற்றும் இச்சாபுரம் பகுதிகளை சேர்ந்த 16 இளைஞர்களை ஏஜென்ட் ஒருவர் வேலைக்காக துபாய்க்கு அனுப்பி உள்ளார். ஆனால் அங்கு இவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 16 பேரும் வேறு வழியின்றி தாயகம்...
ஜனநாயகத்தின் அடிப்படையை பலப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள் சண்டிகரில் 100% அமலுக்கு வந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார். நம் நாட்டில் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சி சட்டம் (ஐஇஏ) ஆகிய சட்டங்கள் அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக முறையே, பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாட்சிய...
உத்தரபிரதேசத்தில் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக பதான்யூ மசூதி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து மகா சபை தொடர்ந்த இந்த வழக்கு டிசம்பர் 3-ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுல்தான்கள் ஆட்சியிலிருந்த டெல்லியின் கீழ் பதான்யூ அமைந்திருந்தது. சுல்தான் வம்சத்தின் மன்னரான குத்புதீன் ஐபக்கிற்கு பின் அவரது மருமகன் இல்துமிஷ் டெல்லியை ஆட்சி செய்தார். அப்போது அவர் பதான்யூவில் பிரம்மாண்ட ஜாமா மசூதியை 1225-ல் கட்டினார். ஒரே சமயத்தில் 23,500...
மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என வீடியோ வெளியிட்ட சையது சுஜா மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், சையது சுஜா என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மகாராஷ்டிர தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களில் (இவிஎம்) தன்னால் முறைகேடு செய்ய முடியும் என கூறியிருக்கிறார். இதுகுறித்து மாநில தலைமைத்...
பயிற்சி முடித்த 4 வாரங்களே ஆன நிலையில் சாலை விபத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 26 வயதான இளைஞர் ஹர்ஷ் பர்தன். ஐபிஎஸ் தேர்வில் கர்நாடக கேடரில் கடந்த 2023-ம் ஆண்டு தேர்வாகி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் அண்மையில் தனது 4 வார பயிற்சியை சமீபத்தில் முடித்திருந்தார். பயிற்சிக் காலம் முடிந்த நிலையில்...
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது போராடும் விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் சங்க தலைவர் ஜகஜித் சிங் தலேவால், பஞ்சாப்-ஹரியானா எல்லையான கானவுரி பகுதியில்...