உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவர்களை வரவேற்க அந்நகரம் தயாராகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இது உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக உலகம் முழுவதுதிலும்...
இந்திய கடற்படைக்காக புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன என்று கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய கடற்படைக்காக 62 போர்க்கப்பல்கள், ஒரு நீர்மூழ்கியை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் புதிதாக...
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பலில் ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்யச் சென்ற தொல்லியல் துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில்,...
தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்தியர்கள் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு கல்ஃப் ஏர் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் 60 இந்தியர்கள் உட்பட பலர் பயணித்தனர். இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 4.34 மணிக்கு விமானம் குவைத்திலிருந்து...
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்கான் கோயிலின் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் டாக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் இந்து விரோதப் போக்கை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வங்க தேசத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனை களில் உள்ள பல மருத்துவர்கள் வெளிப்படையாக...
அதானி மீதான லஞ்ச வழக்கு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் கவுரல் கோகோய் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி கட்சி), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), அபே குஷ்வாகா (ராஷ்ட்ரிய...
“ர​யில்​களில் ஏசி பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்கு வழங்​கப்​படும் கம்பளியை மாதம் 2 முறை துவைக்​கிறோம்” என்று வடக்கு ரயில்வே தெரி​வித்​துள்ளது. நாடு முழு​வதும் ரயில்​களில் ஏசி பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்கு கம்பளி போர்வை வழங்​கப்​படு​கிறது. ஆனால், அவற்றை அவ்வப்​போது துவைப்​ப​தில்லை, அழுக்​காக​வும் துர்​நாற்றம் வீசுவ​தாக​வும் பயணிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்​றனர். இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்​பாளர் ஹிமந்சு சேகர் நேற்று கூறிய​தாவது: ஏசி பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்கு...
சாதாரண மக்களை பிரதமர் மோடியும், பாஜக.,வினரும் வெறுக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி இடம் பெற்ற மகா விகாஸ் அகாடி கூட்டணி தோல்வியைடைந்தது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது....
டெல்லியில் அரசுப் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்​புக்காக கடந்த 2017-ம் ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் (பேருந்து மார்ஷல்ஸ்) நியமிக்​கப்​பட்​டனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்கள் வேலையை இழந்தனர். இதற்கு பாஜகவின் சதியே காரணம் என அப்போதைய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்​தார். இந்நிலை​யில், ஓராண்​டுக்குப் பிறகு 10 ஆயிரம் பேருந்து காவலர்களை மீண்டும் நியமிக்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது துணைநிலை ஆளுநரின் ஒப்பு​தலுக்கு...
குவஹாத்தி: அசாம் மாநிலத்​தில் மாட்​டிறைச்சி உண்பது சட்டத்​துக்​குப் புறம்​பானதல்ல. ஆனால், இந்துக்​கள், ஜெயினர்​கள், சீக்​கியர்கள் பெரும்​பான்​மையாக வசிக்​கும் பகுதி​யில் இறைச்​சிக்காக மாடுகளை கொல்​வது, விற்​பது, உண்பது போன்ற​வற்றுக்கு தடை உள்ளது. அசாம் கால்​நடைகள் பாது​காப்புச் சட்டத்​தின் கீழ் இந்த தடை நடைமுறை​யில் உள்ளது. இந்நிலை​யில், அசாம் மாநிலத்​தின் சமாகுரி சட்டப்​பேர​வைத் தொகு​தி​யில் கடந்த மாதம் இடைத்​தேர்தல் நடைபெற்​றது. இந்தத் தொகு​தி​யில் முஸ்​லிம்​களின் ஆதிக்கம் அதிகம் இருந்​தும் இடைத்​தேர்​தலில் பாஜக வெற்றி...