கடற்படையின் அர்ப்பணிப்பு உணர்வால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் செழிப்பு உறுதி செய்யப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நமது நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பினை ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் நமது கடற்படை வீரர்களுக்கு இந்த கடற்படை தினத்தில் வணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வால்தான்...
மகாராஷ்டிர தேர்தலில் மாலை 5 மணிக்குப் பிறகு 7.8% வாக்குப்பதிவு குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில் இது சராசரி வாக்குப் பதிவுதான் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளை கைப்பற்றியது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி 48 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து தேர்தல் முடிவுகளின் முரண்பாடுகள்...
இந்திய கடற்படைக்கு இரண்டாவது திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோனை அதானி டிபென்ஸ் நிறுவனம் விநியோகித்துள்ளது. ராணுவத் தளவாட தயாரிப்பில் அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள மையத்தில் திருஷ்டி-10 ஸ்டார்லைனர் என்ற ஆளில்லா விமான (ட்ரோன்) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் ட்ரோன் இந்திய கடற்படைக்கு கடந்த ஜனவரி மாதமும், 2-வது டிரோன் தரைப்படைக்கு கடந்த ஜூன் மாதமும் விநியோகித்தது. இந்நிலையில் 3-வதாக தயாரித்த ட்ரோனை, கடற்படைக்கு...
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நேற்று காலை 7.27 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஆந்திராவில் விஜயவாடா, விசாகப்பட்டினம், ஜெக்கைய்யா பேட்டை, நந்திகாமா, ஏலூருவிலும் தெலங்கானாவில் ஹைதராபாத், கம்மம், ரங்காரெட்டி, வாரங்கல், கரீம்நகர், ஜனகாமா உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று காலை 7.27 மணிக்கு தீடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. சுமார் 3 நொடிகள் வரை நீடித்த இந்த நில நடுக்கத்தால்...
நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். நில முறைகேடு வழக்கில் சித்தராமையா பெயர் சிக்கியுள்ளதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா வலியுறுத்தி வருகிறார். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்த இடத்தை கையகப்படுத்தியதற்காக‌ மைசூரு மாந‌கர மேம்பாட்டு கழகம் மாற்று நிலம் ஒதுக்கீடு செய்தது. இதில் முறைக்கேடு நடந்துள்ளதாக புகார்...
டிசம்பர் 3ம் தேதி முக்கியமான நாள். உலகம் முழுவதும் இந்த நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மாற்றுத்திறனாளிகளின் துணிவு, தன்னம்பிக்கை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பு இந்தியாவுக்குப் புனித நாள் போன்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்துவது இந்தியாவின் பண்பாட்டில் உள்ளார்ந்த ஒன்றாக இருக்கிறது. நமது வேதங்களிலும், நாட்டுப்புற கதை,பாடல்களிலும் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கான மரியாதை உணர்வு பொதிந்துள்ளது. மனதில் உற்சாகம் கொண்டவனுக்கு...
பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரல் கடிதத்தை நேற்று அவர் வழங்கினார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளிடையே முதல்வர், துணை...
“மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டத்தின் மூலம் இந்திய ஆராய்ச்சிகள் புது வடிவம் பெறும்” என்று வெளிநாட்டினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் 25-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘ஒரே நாடு ஒரே சந்தா’ (ஓஎன்ஓஎஸ்) திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி 2025, 2026, 2027 ஆகிய 3 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 13,000...
பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தில் 1.3 லட்சம் வேலை வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு கம்பெனிகள் விவகாரத்துறை இணையமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா அளித்த பதிலில் கூறியதாவது: பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் 500 நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் சிஎஸ்ஆர் நிதியில் தொழிற் பயிற்சியை அளிக்கின்றன. 5 ஆண்டுகளில் 1...
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து, வங்கதேசத்தவர்களுக்கு உணவு வழங்க திரிபுரா ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. அங்குள்ள இஸ்கான் கோயில் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து விரோதப் போக்கைக் கண்டித்து, அந்நாட்டிலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்...