திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் உற்வச மூர்த்தி மலையப்பர் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பர் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வாகன சேவையில் திரளான...
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தொழிலதிபரான அவர் இந்தியர்களின் இதயங்களை வென்றது எப்படி என பார்ப்போம்.
அக்.9 (புதன்கிழமை) மாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 86 வயதான ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘வழக்கமான...
இந்தியா-மாலத்தீவு ரூ.3,000 கோடியில் ஒப்பந்தம்: பிரதமர் மோடி, அதிபர் முய்சு முன்னிலையில் கையெழுத்தானது
admin - 0
புதுடெல்லி: பிரதமர் மோடி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு முன்னிலையில் இந்தியா, மாலத்தீவு இடையே ரூ.3 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சீன ஆதரவுத் தலைவராக அறியப்படும் முகமது முய்சு மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற தில் இருந்து இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் அதிகரித்தது. அவரது அறிவுறுத்தலின்பேரில், மருத்துவச் சேவைக்கான ஹெலி காப்டர்களை மாலத்தீவில் இயக்கி வந்த இந்திய ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர்.
இந்நிலையில், சமீப காலமாக மாலத்தீவு நிதி ரீதியில் பல்வேறு...
புதுடெல்லி: அமெரிக்க வான் எல்லையில் கடந்தாண்டு ஜனவரி - பிப்ரவரியில் சீன உளவு பலூன் ஒன்று 58,000 அடி உயரத்தில் பறந்து சென்றது. இதை அமெரிக்க விமானப்படையின் எப்-22 ரேப்டர் ரக விமானம் ஏவுகணையை வீசி நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
இதேபோன்ற உளவு பலூன் ஒன்று அந்தமான், நிகோபார் தீவு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு பறந்துள்ளது. அந்தமான் பகுதியில் போர் விமானங்கள் அப்போது நிறுத்தி வைக்கப்படாததால் அந்த உளவு பலூன்...
புதுடெல்லி: நமது நாட்டில் கொண்டாடப்படும் நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியுள்ளது. நவராத்திரி விழா முடிந்ததும் 10-ம் நாள் விஜய தசமி விழா நடைபெறும். இந்த பண்டிகை தொடங்கியுள்ளதை அடுத்து பக்தர்கள் விரதம் இருந்து பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகை வட மாநிலங்களில் தசரா பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படு கிறது. குறிப்பாக மேற்கு வங்கம், கர்நாடகாவில் தசரா விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு,...
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர்ரயில் நிலையத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
நாக்பூர் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் நேற்று அதிகாலையில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த 6-7 பயணிகளை மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கான்கிரீட் சிலாப் மூலம் தாக்கினார். அவர்களின் அலறல் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே...
சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பாஜக முன்னிலை: வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. வெற்றிக்கு 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் காலை 10 மணிக்குப் பின்னர் தேர்தல் முடிவுகளின் போக்கு மாறியது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், பாஜக 46...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய தரவுகளின்படி பாஜக - 26, காங்கிரஸ் கூட்டணி - 48, பிடிபி - 3, பிற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. ஆரம்ப நிலையில் காங்கிரஸ் -...
புதுடெல்லி: பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத் தின் கீழ் முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இத்திட்டத்தில் தொழில் பயிற்சி பெறுவோருக்கு ஒராண்டுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி அளிக்கப்படும். மேலும், ஒரு முறை மானியமாக ரூ.6,000 வழங்கப்படும். மொத்தம் தொழிற்பயிற்சி பெறுவோருக்கு ரூ.66,000 கிடைக்கும்.
இத்திட்டத்தில் சிஎஸ்ஆர் நிதி அடிப்படையில் 500 முன்னணி நிறுவனங்கள் பதிவு செய்யவுள்ளன. முதல் நாளிலேயே 111 முன்னணி...
மும்பை: மகாராஷ்டிராவில் தாங்கர் சமூகத்தினருக்கு நாடோடி பழங்குடியினர் (என்.டி) என்ற பிரிவின் கீழ் 3.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 7% இடஒதுக்கீடு கொண்ட எஸ்டி பிரிவில் தங்களை சேர்க்க வேண்டும் என்று தாங்கர் சமூகத்தினர் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தாங்கர் சமூகத்தை சேர்ந்த 6 பேர் பந்தர்பூரில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தாங்கர் சமூகத்தினரின் இந்த கோரிக்கைக்கு துணை சபாநாயகர் நர்ஹரி...










