போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுவிப்பு: 25 ஆண்டுகளுக்குப் பின் மும்பை திரும்பிய நடிகை மம்தா குல்கர்னி
admin - 0
போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி (வயது 52) மும்பைக்கு திரும்பியுள்ளார்.
கரண் அர்ஜுன் உட்பட ஏராளமான இந்தி படங்களில் நடித்திருப்பவர் நடிகை மம்தா குல்கர்னி. இவர் முதன்முதலில் தமிழ் படத்தில்தான் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டுக்குச் சென்றார். தமிழில் 1991-ம் ஆண்டு வெளிவந்த நண்பர்கள் என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். இந்தப் படத்தை நடிகர் விஜய் தயாரிக்க, அவரது...
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற தலித் அல்லாத மனைவியின் குழந்தைக்கு எஸ்சி சாதி சான்றிதழ்: உச்ச நீதிமன்றம்
admin - 0
தலித் கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் நிலையில், தலித் அல்லாத அவரின் மனைவியின் பராமரிப்பில் வளரும் அவர்களது குழந்தைகளுக்கு எஸ்சி சாதிச் சான்றிதழை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
ஜுஹி போரியா நீ ஜவால்கர் மற்றும் பிரதீப் போரியா தம்பதியினர் விவாகரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குநீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று...
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் பி.அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் விமர்சனத்தால் பல்லடம் படுகொலை சம்பவம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, அச்சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் முறையான துப்பு கிடைக்காமல் தமிழக...
இந்திரா காந்தி அமைதிப் பரிசுக்கு முன்னாள் சிலி நாட்டின் அதிபர் மைக்கேல் பேச்லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை நேற்று இதை அறிவித்துள்ளாது. முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் வெளியுறவுத்துறை செயலருமான சிவசங்கர் மேனன் தலைமையிலான குழு, விருதுக்குரிய நபரின் பெயரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சில அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக...
நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பிய பரஸ்பர குற்றச்சாட்டுகளால் அலுவல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரத்தை விவாதிக்க கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்றம் செயல்படுவதில் முட்டுக்கட்டை நீட்டித்து வருகிறது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கவுரவ் கோகாய் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று அவை தொடங்குவதற்கு...
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 20 நாட்களில் அவர் மீது போடப்பட்ட 2-வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா...
ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகெங்கிலும் வெளியானது. முன்னதாக புதன்கிழமை இரவு இப்படத்தின் பிரிமியர் ஷோக்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பல திரையரங்களில் நடந்தன. இதில் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் நடந்த பிரிமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார்....
கர்நாடகாவில் நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்ட லிங்காயத்து மடாதிபதி சித்தகங்கா சிவகுமார சுவாமி கடந்த 2019-ம் ஆண்டு தனது 111-வது வயதில் காலமானார். அவருக்கு பெங்களூரு வீரபத்ர நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த நவம்பர் 30-ம் தேதி இரவில் தார் பூசி அவமதிக்கப்பட்டது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் உணவு டெலிவரி ஊழியர் ஸ்ரீகிருஷ்ணா (33) என்பவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர்...
பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் இருந்தது. அப்போது துணை முதல்வராக இருந்த சுக்பிர் சிங் பாதல் செய்த தவறுகளுக்காக அவருக்கு சீக்கிய மதத்தின் உயர் அமைப்பான அகால் தக்த் தண்டனை வழங்கியது.
இதன்படி அமிர்தசரஸ் பொற்கோயிலில் சுக்பிர் சிங் பாதல் நேற்று முன்தினம் சேவை செய்தார். அப்போது காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். எனினும் அதிர்ஷ்டவசமாக சுக்பிர்...
கர்நாடகாவில் பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொல்லப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 16 இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28). கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...









