உள்நாட்டில் தயாரான லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் 55 சதவீத ட்ரோன்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பிஎஸ்எப் எனப்படும் எல்லையோரப் பாதுகாப்பு படையின் 60-வது நிறுவன நாள் விழா, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. மொத்தம், 2.65 லட்சம் வீரர்கள் உள்ள இந்த படைப் பிரிவு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.11) கேரளா செல்கிறார். அங்கு தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, கேரள மாநில திமுக ஏற்பாடு செய்துள்ளது. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், கோயில் நுழைவு போராட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற பெரியார் அப்போராட்டத்தில் பங்கேற்று பெற்ற வெற்றியை...
மக்களவைக்​கும், மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களின் சட்டப் பேரவை​களுக்​கும் ஒரே நேரத்​தில் தேர்தல் நடத்த வகை செய்​யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ திட்​டத்தை மத்திய அரசு முன்னெடுத்​துச் செல்​ல​வுள்​ளது. இந்தத் திட்​டத்​துக்கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்து ஆராய்ந்த குடியரசு முன்​னாள் தலைவர் ராம்​நாத் கோவிந்த் தலைமையிலான உயர்​மட்டக் குழு சமர்ப்​பித்த அறிக்கையை, மத்திய அமைச்​சரவை கடந்த செப்​டம்​பரில் ஏற்றுக் கொண்​டது. மக்களவை, மாநில சட்டப்​பேர​வை​கள், நகராட்​சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய...
வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தி உள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதன்காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்த...
மதம் மாற மனைவியும் அவரது குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தியதாக கூறி சத்தீஸ்கரில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். சத்தீஸ்கரின் அர்ஜுனி காவல் எல்லைக்குட்பட்ட பொட்டியாதி கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கில் சடலமாக காணப்பட்டார். அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் பதிவில் தன்னை மதம் மாறுமாறு தனது மனைவியும்...
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் தெளிவாக தெரிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உலகளாவிய முதலீடு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு துறையிலும் தெளிவாக காணமுடிகிறது. மிக நெருக்கடியான காலகட்டத்திலும், வலுவாக செயல்படக்கூடிய பொருளாதாரம்தான் இன்றைய உலகத்துக்கு தேவை. இதற்கு, இந்தியாவில் மிகப் பெரிய...
நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்​வதற்கு மட்டும்​தான் என்ற நிலை மாறி​விட்​டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்​கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்​தமான பரிவர்த்​தனை​களுக்​கும், தங்கம், நிலம் வாங்​கு​வதற்​கும் பான் கார்டு கட்டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதனால்​தான் வருமான வரிதா​ரர்கள் எண்ணிக்கை 8.62 கோடியாக இருந்த​போ​தி​லும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்​கி​யுள்​ளனர். இந்நிலை​யில், பான் 2.0 திட்​டத்தை செயல்​படுத்த மத்திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது....
இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்துகொண்டார். பொது சிவில் சட்ட அவசியம் குறித்து அவர் உரையாற்றினார். பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் ஒரு பிரிவாக இருப்பது விஎச்பி. இது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடிக்க கரசேவை நடத்தியது. முஸ்லிம்களுக்கும் அவர்களது மசூதிகளுக்கும் எதிராக சர்ச்சையான கருத்துகளை விஎச்பி பலமுறை வெளியிட்டுள்ளது. இதன்...
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (டிச.10) 2.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். கடந்த ஆண்டு அவரது அரசியல் பணியை போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 1932-ல் கர்நாடக மாநிலத்தின் சோமஹல்லியில்...
மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சாரப் பேருந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்தனர். மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திங்கள்கிழமை இரவில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அஃப்ரீன் ஷா (19), அனம் ஷேக் (20), சிவம் கஷ்யப் (18) மற்றும்...