Google search engine
நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் உதவி செய்ய வேண்டும். கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் டாக்டர் உயிரிழப்பு அவமானகரமான செயல். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். தர்மம் என்பது ஒரு மதம் கிடையாது....
புதுடெல்லி: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சக அதிகாரி கூறியதாவது: நாடு முழுவதும் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்கீழ், நாடுமுழுவதும் தடுப்பணைகளை கட்டுதல், நீர்த்தேக்கங்களை உருவாக்குதல், கிணறுகளை ஆழப்படுத்தி சீரமைத்தல் உட்பட 10 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜல் சஞ்சய், ஜன் பகிதாரி (ஜேஎஸ்ஜேபி) என்ற இந்த புதிய முன்முயற்சி, கடந்த 2019-ம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை...
திருவனந்தபுரம்: ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே இனி சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேரள அரசின் முடிவுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நடப்பு ஆண்டுக்கான சபரிமலை சீஸன் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்க உள்ளது. சபரிமலையில் மண்டலம்-மகரவிளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள் இனி ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்பாட்புக்கிங் எனப்படும் நேரடியாக வந்து பதிவு செய்யும் முறை இனி கிடையாது என...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி 37, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளைக் கைப்பற்றின. இந்த...
வடவனூர்: எம்ஜிஆர் இலங்கையின் கண்டியில் பிறந்தாலும், குழந்தைப் பருவத்திலேயே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடகன்னிகாபுரத்துக்கு வந்துவிட்டார். அவரது குழந்தைப் பருவகாலம் முழுவதும் அந்த வடவனூர், வடகன்னிகாபுரம் கிராமங்களில்தான் கழிந்தது. இந்த வடகன்னிகாபுரத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1898-ல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. இது தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள பாலக்காடு ரயில்வே டிவிஷனின் கீழ் வருகிறது. இந்த பழமை வாய்ந்த ரயில் நிலையம் பாலக்காடு - பொள்ளாச்சி தடத்தில் அமைந்துள்ளது....
புதுடெல்லி: அக்டோபர் 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த 9-ம் தேதி தெரிவித்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக அல்ஜீரியா, மவுரிடானியா மற்றும் மலாவி நாடுகளுக்கு...
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “2019 ஆம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் மறுகட்டமைப்பு சட்டத்தின் 73ஆவது பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து உரிமை கோரிய நிலையில்...
புதுடெல்லி: விஜயதசமி தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விஜயதசமியின் புனிதமான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி விழா. இந்த திருவிழா உண்மை மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளில் நமது நம்பிக்கையை குறிக்கிறது. மிகவும்...
புதுடெல்லி: “அரசு விழித்துக் கொள்ளும் முன் இன்னும் எத்தனைக் குடும்பங்கள் அழிய வேண்டும்” என்று மைசூரு தார்பங்கா ரயில் விபத்தை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது தொடர்பாக அவர் இன்று (அக்.12) தனது எக்ஸ் பக்கத்தில், “மைசூரு - தார்பங்கா ரயில் விபத்து பாலாசோர் விபத்தின் கோரத்தை நினைவூட்டுகிறது. ஒரு பயணிகள் ரயில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற...
வியன்டியன்: லாவோஸில் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு. காலிஸ்தான் பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ என அழைக்கப்படுகிறது. அதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பில் 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில்...