ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி. மஸ்தான் ராவ் ஆகிய இருவரும் நேற்று காலை டெல்லியில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை நேரில் வழங்கினர்.
இது உடனடியாக ஏற்கப்பட்டது. இவர்கள் இருவரின் ராஜினாமாவை தொடர்ந்து ஜெகன் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 9-ஆக குறைந்துள்ளது.
இதில் வெங்கட ரமணாவின் பதவிக்காலம் 2026 வரையிலும், மஸ்தான் ராவின் பதவிக்காலம் 2028 வரையிலும் உள்ளது....
கவிதாவுக்கு 5 மாதத்தில் ஜாமீன் கிடைத்தது பற்றி சர்ச்சை பேச்சு: தெலங்கானா முதல்வர் மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்
admin - 0
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா நிபந்தனை ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்தார். இதுகுறித்து பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், தெலங்கானா மாநில முதல்வர்ரேவந்த் ரெட்டியும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து ரேவந்த் ரெட்டி கூறுகையில், ”நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சி ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு செயல்பட்டது. இதனை நாங்கள் பல...
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:
இந்த நிகழ்வின் தொடக்கமாக, தொலைநோக்கு பார்வை கொண்ட நமது பிரதமர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதற்கு அன்புடன் வாழ்த்துவோம். இது, நாட்டின் ஸ்திரத்தன்மை, துடிப்பான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தல் முடிவு உலகளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்த உதவியுள்ளது. அதுமட்டுமின்றி, நமது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும்...
ஆந்திராவில் கோயில்களில் பிற மதத்தவருக்கு பணி வழங்கப்படாது: முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்
admin - 0
ஆந்திர மாநிலம் அமராவதியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆந்திராவில் ஒவ்வொரு கோயிலிலும் ஆன்மிகம் செழித்தோங்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணத்தை பறிக்காமல் அவர்கள் மீண்டும், மீண்டும் அக்கோயிலுக்கு வரும் வகையில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். கோயில்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மிகவும்தூய்மையாக இருப்பது அவசியம்.ஆந்திராவில் பல முக்கிய கோயில்கள் வனப்பகுதியில் இருப்பதால் சுற்றுலாத்...
உத்தர பிரதேசத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சமூக ஊடக கொள்கைக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் கண்டனத்துக்குரிய தகவல்களை பதிவிட்டால் நடவடிக்கை பாயும்.தேசத் விரோத தகவல்களை பதிவிட்டால் 3 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஆபாசம் மற்றும் அவதூறு தகவல்களை...
அசாம் சட்டப்பேரவையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற சட்ட மசோதவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு நேற்று தாக்கல் செய்தது.
இந்த சட்ட மசோதா பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அமளியில்ஈடுபட்டன. இவற்றுக்கு மத்தியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முதல்வர்ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ‘‘இதுவரை...
பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் வக்பு வாரிய சொத்து ஆகாது: மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு
admin - 0
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளபுர்ஹான்பூர் கோட்டை வளாகத்தில் அரண்மனை, ஷா ஷுஜாவின் கல்லறை, நாதிர் ஷாவின் கல்லறை,பிபீ சாஹிம் மசூதி ஆகியவை அமைந்துள்ளன. இவை முஸ்லிம்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவை யாவும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் எனஅறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கட்டுப்பாட்டின் கீழ் அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தநினைவுச் சின்னங்கள் அனைத்தும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று மத்திய பிரதேச மாநிலவக்பு வாரியம் அறிவித்தது.
மேலும்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.
“போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வாகி உள்ள இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டருக்கு அனைவரும் கைத்தட்டல் அளித்து வாழ்த்துவோம்” என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அவரது...
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. இப்போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்தும், சுமுக தீர்வை எட்ட முடியவில்லை.இந்த சூழலில், ரஷ்யா - உக்ரைன் போருக்கு...
திருப்பதி தேவஸ்தானத்தில் கோடி கணக்கில் முறைகேடு: முன்னாள் அறங்காவலர், நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ்
admin - 0
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டுமுன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கருணாகர் ரெட்டி, முன்னாள் நிர்வாகஅதிகாரி தர்மாரெட்டி உட்பட மேலும்பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டில் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணம்,...










