இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து வங்கதேசத்தவருக்கு சிகிச்சை தர மேற்கு வங்க மருத்துவர்கள் மறுப்பு
admin - 0
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இஸ்கான் கோயிலின் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் டாக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தின் இந்து விரோதப் போக்கை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வங்க தேசத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனை களில் உள்ள பல மருத்துவர்கள் வெளிப்படையாக...
அதானி மீதான லஞ்ச வழக்கு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் கவுரல் கோகோய் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாதி கட்சி), கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), அபே குஷ்வாகா (ராஷ்ட்ரிய...
ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளின் கம்பளியை மாதம் 2 முறை துவைக்கிறோம்: வடக்கு ரயில்வே விளக்கம்
admin - 0
“ரயில்களில் ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளியை மாதம் 2 முறை துவைக்கிறோம்” என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரயில்களில் ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு கம்பளி போர்வை வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றை அவ்வப்போது துவைப்பதில்லை, அழுக்காகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் பயணிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஹிமந்சு சேகர் நேற்று கூறியதாவது: ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு...
சாதாரண மக்களை பிரதமர் மோடியும், பாஜக.,வினரும் வெறுக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி இடம் பெற்ற மகா விகாஸ் அகாடி கூட்டணி தோல்வியைடைந்தது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது....
டெல்லியில் அரசுப் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் (பேருந்து மார்ஷல்ஸ்) நியமிக்கப்பட்டனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்கள் வேலையை இழந்தனர். இதற்கு பாஜகவின் சதியே காரணம் என அப்போதைய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு 10 ஆயிரம் பேருந்து காவலர்களை மீண்டும் நியமிக்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு...
காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டால் அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க தயார்: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உறுதி
admin - 0
குவஹாத்தி: அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது சட்டத்துக்குப் புறம்பானதல்ல. ஆனால், இந்துக்கள், ஜெயினர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வது, விற்பது, உண்பது போன்றவற்றுக்கு தடை உள்ளது. அசாம் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த தடை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், அசாம் மாநிலத்தின் சமாகுரி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதியில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தும் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி...
மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று. 23-ம்தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் என்சிபி கட்சிகள் அதிக இடத்தைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளன.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சித் தலைமை அனுப்பிய புகாரில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சுமார் 450 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேர்தல் நியாயமான முறையில்...
மத்திய அரசு திட்ட பயன்களை பெற பெண்கள் முன் வர வேண்டும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு
admin - 0
பிஹார் மாநிலத்தின் மதுபானி நகரில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50,294 பயனாளிகளுக்கு ரூ.1,121 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு லட்சாதிபதி சகோதரி இருக்க வேண்டும் என நமது பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காக வங்கிகள் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கின்றன. பிஹாரில் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக பெண்களுக்கு பயிற்சியும்,...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: சமூகத்தின் அடிப்படையான ஒரு அங்கம்தான் குடும்பம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு குழு. இந்நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.1-க்கு கீழ் சென்றால் சமூகம் தானாகவே அழிந்துவிடும் என லக்சன்க்யா சாஸ்திரம் கூறுகிறது. இந்திய மக்கள் தொகை...
நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
இப்போது விசாகப்பட்டினம், மர்மகோவா, நியு மங்களூரு, கொச்சி, மும்பை மற்றும் சென்னை ஆகிய 6 முக்கிய துறைமுகங்களில் நீர்வழி சுற்றுலா முனையங்கள் உள்ளன. நீர்வழி சுற்றுலா திட்டத்தின் மூலம்...










