மிசோரம் சிறையிலிருந்த 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பி ஓடி உள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த வான்சூயனி (36) மற்றும் லால்சன்மாவி (44) ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த இந்த 2 பேரும், சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக சிறை நிர்வாகம் நேற்று தெரிவித்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சம்பை...
உ.பி.யின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உ.பி.யின் ஷாஜகான்பூர் மாவட்டம், கான்ட் பகுதியை சேர்ந்தவர் ரியாசுல் அலி (45). டெல்லியில் ஆயத்த ஆடை தொழில் செய்துவந்த இவர், உறவினரின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார். இதன் பிறகு புதன்கிழமை இரவு தனது குடும்பத்துடன் டெல்லிக்கு காரில் புறப்பட்டார்.
இந்நிலையில் பரேலி -...
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் ஒத்திவைக்கப்பட்டன.
காலை 11 மணிக்கு மக்களவை கூடியபோது அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை சமாதானப்படுதத முயன்றார். இதனிடையில், தமிழக முன்னாள் மக்களவை உறுப்பினர்...
மகாராஷ்டிர சட்ட மேலவையின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த ராம் ஷிண்டே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர சட்ட மேலவையின் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராம்ராஜே நாயக் நிம்பல்கர் இருந்தார். இவரது பதவிக்காலம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி நிறைவடைந்தது. அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பதவி காலியாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி...
ஜல்ஜீவன் திட்டம் 79% நிறைவேற்றம்; குடிநீர் குழாய் இணைப்பை விரைவாக வழங்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
admin - 0
நாடு முழுவதும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பிரதமரான பிறகு நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, கிராமங்களில் சுமார் 19 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லை என தெரியவந்தது. இந்நிலையில் ஜல் ஜீவன் திட்டத்தின்...
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று உத்தவ் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) உத்தவ் மீண்டும் திரும்பும் சூழல் உருவாகி உள்ளது.
கடந்த 2019 மகாராஷ்டிர தேர்தலில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியின் முதல்வராக சிவசேனாவின்...
மும்பை படகு விபத்தில் காணாமல்போன 2 பேரை தேடும் பணி தீவிரம்: இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி
admin - 0
மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது கடற்படையின் விரைவு ரோந்துப் படகு மோதியவிபத்தில் காணாமல்போன இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மும்பையின் ‘கேட் வே ஆப் இந்தியா’ பகுதியில் இருந்து பிரபல சுற்றுலா தலமான எலிபென்டா தீவு நோக்கி ‘நீல்கமல்’ என்ற சுற்றுலா படகு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இப்படகில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது அப்பகுதியில் கடற்படையின் விரைவுப் படகு...
நாகாலாந்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஃபங்க்னான் கொன்யாக் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாடாளுமன்ற நுழைவு வாயிலில் படிக்கட்டுக்கு கீழே வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என்னை நோக்கி மிக நெருக்கமாக வந்து உரக்க கோஷமிட ஆரம்பித்தார். அவரின் இந்த செயல் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
எனது கண்ணியம் மற்றும் சுயமரியாதையை ராகுல்...
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து காயமடைந்த 2 பாஜக எம்.பி.க்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திதான் அவர்களை தள்ளிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டிஉள்ளது.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்த ரசாயனம் ஏற்றிவந்த டேங்கர் வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர்.
விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எல்பிஜி டேங்கர் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. டேங்கரில் ரசாயனம் இருந்ததால் அதன்...









