Google search engine
வருங்​கால கணவர் கேத்​தனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலன் சேத்​தனுக்கு சியா கோயல் கொடுத்​திருப்​பது போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த ரியல் எஸ்​டேட் அதிபர் கேத்தன் அகர்​வால் (26). இவர் சக்​சஸ் குரூப் என்ற கட்​டு​மான நிறுவனத்தை நடத்தி வரு​கிறார். இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இவருக்​கும் புனேவை சேர்ந்த சியா கோயலுக்​கும் (20) கடந்த பிப்​ர​வரி 11-ம் தேதி இரு​வீட்​டார்...
மும்​பை​யில் கரை ஒதுங்​கிய திமிங்கலம் குட்டியை மீட்பு குழு​வினர் மீண்​டும் கடலுக்​குள் அனுப்​பும் முயற்​சி​யில் ஈடுபட்டனர். ஆனால் அந்த திமிங்​கலம் குட்டி இறு​தி​யில் இறந்​தது. மும்​பை​யின் பாந்த்ரா கடலோர பகு​தி​யில் அமைந்​துள்ள கார்​டர் கிளப் அருகே ஒரு திமிங்​கலம் தென்​படு​வதை பாந்த்​ரா-வெர்​சோவா கடல் பாலம் அமைக்​கும் திட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள ஊழியர்கள் கடந்த சனிக்​கிழமை பார்த்​தனர். அது பின்​னர் கரை ஒதுங்கிய நிலை​யில் அசைந்து கொண்​டிருந்​தது. அது 26 அடி நீளம்...
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார். அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்நிலையில் சிஜி என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சேறு நிறைந்த சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது மழை நீரில்...
வடகிழக்கு மாநிலங்​களில் பெய்​யும் கனமழையால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது. அசாமில் சுமார் 22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடமை​களை இழந்து பரித​வித்து வரு​கின்​றனர். ஏராள​மான ரயில் சேவை​கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வடமாநிலங்​களில் பரு​வ​மழை தீவிரமடைந்து வரு​கிறது. குறிப்பாக அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்​கிம், மேகாலயா உள்​ளிட்ட வடகிழக்கு மாநிலங்​களில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வரு​கிறது. அசாமின் தேமாஜி, நல்​பாரி, திப்ரூகர், சிரங், லக்​கிம்​பூர், கோக்​ராஜார் மாவட்​டங்​களில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த...
போரில் மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து டெஹ்ரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலின் முதல் நாளில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டத்தின்படி இறந்தவர்களின் உடலை கூடிய விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றாலும்...
 குஜ​ராத்​ மாநிலம் அகம​தா​பாத்தைச் சேர்ந்​த மினேஷ் பாய், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ரத யாத்​திரை திரு​விழா நாளில் தனது மனைவி கோமல்​பென் சோலங்கியை ஊர் சுற்​றிக் காட்​டு​வ​தாகக் கூறி வெளியே அழைத்துச் சென்​றுள்​ளார். நள்​ளிர​வில் மனை​வியை சபர்​மதி ஆற்​றங்​கரைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார். அங்கு இரு​வரும் பேசிக் ​கொண்​டிருந்​த ​போது, எதிர்​பா​ராத நேரத்​தில் மனை​வியை தூக்கி ஆற்​றில் வீசி​யுள்​ளார். பிறகு அங்​கிருந்து தப்​பிய மினேஷ் மறு​நாள் கலுபூர்...
ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​வ​தால் மக்​களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் வழக்​க​மாக ஜூன் 10-ம் தேதி வாக்​கில் பரு​வ​மழை தொடங்​கும். ஆனால் இந்த ஆண்டு 13 நாட்கள் தாமத​மாக செவ்​வாய்க்​கிழமை பரு​வ​மழை தொடங்கியது. அன்று இரவு முழு​வதும் கனமழை பெய்​தது. நேற்று காலை​யிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்​தது. மும்பை மற்​றும் தானே, ராய்​கட், பால்​கர் மற்​றும் சிந்​துதுர்க்...
 நாட்டின் தொழில்​நுட்ப தலைநக​ராக விளங்​கும் பெங்​களூரு​வில் 20 லட்​சத்​துக்​கும் அதி​க​மான ஐடி ஊழியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். இவர்​களில் பெரும்​பாலானோர் தங்​களின் அலு​வல​கங்​களுக்கு மெட்ரோ ரயில் மூலம் செல்​கின்​றனர். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு 7 மணி​யள​வில் க‌ப்​பன் பூங்கா மெட்ரோ நிலை​யத்​தில் ஊதா வழித்​தடத்​தில் இயங்​கிய ரயி​லில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​டது. கெம்​பேக​வுடா மெட்ரோ நிலை​யம் முதல் பையப்​பனஹள்ளி வரையி​லான சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது. இதனால் விதான சவு​தா, எம்​.ஜி.சாலை, இந்​திரா...
கேரளா​வில் 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு காங்கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி ஆட்சியைப் பிடித்​தது. காங்​கிரஸ் கட்​சி​யின் வி.டி.சதீஷன் முதல்வராக பதவி​யேற்​றார். இந்​நிலை​யில், கேரளா​வில் புதிய மது​பானக் கொள்​கையை அமல்படுத்த அரசு முடிவு செய்​துள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, குறைந்த ஆல்​கஹால் கொண்ட மது பானங்​களுக்​கான வரி 251-லிருந்து 121 சதவீத​மாகக் குறைக்​கப்பட உள்​ளது. இது குறித்து ‘சமஸ்தா கேரளா ஜெம்​-இய்​யத்​துல் உலமா' அமைப்பு வெளி​யிட்ட அறிக்​கை​யில், ”போதைப் ​பொருள் மற்​றும்...
நிஹாங் என்​பவர்​கள் சீக்​கியர்​களில் ஒரு பிரி​வினர் ஆவர். இவர்​கள், சீக்​கிய மதத்​தில் ஆயுதம் ஏந்​திய போர் வீரர்களாக அழைக்​கப்​படு​கின்​றனர். நாடு முழு​வதும் உள்ள குருத்​வா​ராக்​களுக்கு நிஹாங் சீக்​கியர்​கள் புனிதப் பயணம் மேற்​கொள்​கின்​றனர். கடந்த 16ம் தேதி உத்​த​ராகண்ட் மாநிலம், கர்​ணபிர​யாக் பகு​தி​யில் 6 நிஹாங் சீக்கியர்களுக்​கும் உள்​ளூர் மக்​களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிஹாங் சீக்​கியர்​கள் வாள்​களை வீசி​ய​தில் 4 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இதில் ஒரு​வரின் நிலைமை...