பெங்களூருவில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் லாரியில் வீட்டுக்கு சென்ற ஐடி ஊழியர்கள்

0
14

 நாட்டின் தொழில்​நுட்ப தலைநக​ராக விளங்​கும் பெங்​களூரு​வில் 20 லட்​சத்​துக்​கும் அதி​க​மான ஐடி ஊழியர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். இவர்​களில் பெரும்​பாலானோர் தங்​களின் அலு​வல​கங்​களுக்கு மெட்ரோ ரயில் மூலம் செல்​கின்​றனர்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு 7 மணி​யள​வில் க‌ப்​பன் பூங்கா மெட்ரோ நிலை​யத்​தில் ஊதா வழித்​தடத்​தில் இயங்​கிய ரயி​லில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​டது. கெம்​பேக​வுடா மெட்ரோ நிலை​யம் முதல் பையப்​பனஹள்ளி வரையி​லான சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது. இதனால் விதான சவு​தா, எம்​.ஜி.சாலை, இந்​திரா நகர் உள்​ளிட்ட‌ ரயில் நிலை​யங்​களில் ஆயிரக்​கணக்​கான பயணி​கள் சிக்​கித் தவித்​தனர்.

10-க்​கும் மேற்​பட்ட மெட்ரோ நிலை​யங்​களை சுற்றி கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. ஊதா வழித்தட மெட்ரோ சேவை முடங்​கிய​தால் பேருந்​து, ஆட்​டோ, வாடகை கார் கிடைப்​ப​தி​லும் சிரமம் ஏற்​பட்​டது. இதனால் பயணி​கள் 5 கி.மீ. வரை நடந்து சென்றனர். பெரும்​பாலானோர் அதிக கட்​ட​ணம் கொடுத்து வாடகை வாக​னங்​களில் சென்றனர்.

கெங்​கேரி, எலச்​சனஹள்​ளி, நாகசந்​திரா போன்ற மெட்ரோ ரயில் நிலை​யங்​களுக்கு வெளியே 11 மணி வரை காத்​திருந்த பயணிகள் லாரி, சரக்கு வாக​னம் ஆகிய​வற்​றில் ஏறி வீட்​டுக்​குச் சென்​றனர். ஐடி ஊழியர்​கள் லாரி​களில் ஏறிச் செல்​லும் வீடியோ சமூக வலை​ தளங்​களில் வெளி​யாகி வைரலானது. இதனிடையே தொழில் ​நுட்ப குழுக்​கள் சம்பவ இடத்​துக்கு சென்று சேவையை மீட்​டெடுக்​கும் பணி​யில் ஈடு​பட்​டன. இதையடுத்து நேற்று காலை 5 மணி முதல் மெட்ரோ சேவை மீண்​டும் தொடங்​கியது.

இது குறித்து பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறுகை​யில், ”உல​கின் முதல்தர திறமை படைத்த ஐடி ஊழியர்​கள், மூன்​றாம் தர அரசின் காரண​மாக சரக்கு வாக​னங்​களில் ஏறிச் செல்​லும் அவலம் நிகழ்ந்துள்​ளது. லட்​சக்​கணக்​கில் வரி செலுத்​தி​யும் போதிய அடிப்​படை கட்​டமைப்பு வசதி​​யும், போக்​கு​வரத்து வசதி​யும் அரசு அவர்களுக்கு செய்து தரவில்​லை. மெட்ரோ சேவை முடங்​கி​னால் அரசு உடனடி​யாக போக்​கு​வரத்து வசதி செய்து தந்​திருக்​க வேண்டும்​” என விமர்​சித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here