எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக...
புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராம் வி. சுதார் (100) காலமானார்.
குஜராத்தின் கெவாடியாவில் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை வடிவமைத்தவர்தான் ராம் சுதார். வயது முதிர்வு காரணமாக உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ராம் சுதார் தனது...
காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர் அதிகார அமைப்பான செயற்குழுவின் கூட்டம் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவரும் அரசின் நடவடிக்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிஹார் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பிறகு நடைபெறும் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி,...
ரூ.50,000 கடனை அடைக்க முடியாததால் விவசாயியை கம்போடியா அழைத்துச் சென்று சிறுநீரகத்தை எடுத்த கும்பல்!
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே(29). இவருக்கு சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், பால் பண்ணை வைக்க மாடுகளை வாங்கியுள்ளார்.
இதற்காக, உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் கடந்த 2021-ம் தேதி ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். அவர்களுக்கு வட்டியாக ரூ.7.5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். எனினும், கடன் முடியவில்லை என கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், ஒரு சிறுநீரகத்தை விற்று...
நாட்டில் இலக்கியத்துக்கான உயரிய சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் எழுத்தாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 2025ம் ஆண்டு விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியலை தேர்வுக் குழுக்கள் பரிந்துரை செய்தன. அதன் பின்னர் சாகித்ய அகாடமி தேசிய நிர்வாகக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட...
பஹல்காம் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: கணவனை இழந்த இளம்பெண் ராணுவம், என்ஐஏ.வுக்கு நன்றி
admin - 0
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிந்து பலரை கைது செய்தது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் என்ஐஏ நேற்றுமுன்தினம் 1,597 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சுபம்...
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல், டீசல் விலையில் உள்ள வேறுபாடுகள் குறித்த கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் அளித்த பதில்: நாட்டில் உள்ள சிறிய, பெரிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட ஆந்திர மாநிலத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
அமராவதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.74 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக நாட்டில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் ஒரு...
வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை நீக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த (எஸ்ஐஆர்) பணி நடைபெறுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நட்டா பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் மீதான செயல்பாடுகள்...
நேபாள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உயர் மதிப்புள்ள இந்திய கரன்சிகளை கொண்டு செல்வதற்கான ஒரு தசாப்த கால தடை, முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25,000 மதிப்புள்ள 200, 500 ரூபாய் இந்திய நோட்டுகளை வைத்திருக்க முடியும். திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திருத்தப்பட்ட விதியின்படி, நேபாள மற்றும் இந்திய குடிமக்கள் இருவரும் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவிலிருந்து...
மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் ரூ.14.4 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் நடைபெற்ற இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அறங்காவலர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம்...
