Google search engine
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று தெரியும்.இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்தனர். தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி...
நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 16-ம் தேதி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். 17-ம் தேதி அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது...
கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீஸார் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.22.86 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க நகைகள், சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின. கர்நாடக மாநிலத்தில் அரசு பணியில் உள்ள அரசு அதிகாரிகள் சிலர் ஊழலில் ஈடுபட்டுள்ள‌தாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பெலகாவி, ராம்நகர், ஹாசன், ஹாவேரி உள்ளிட்ட...
பிஹாரின் தர்பங்கா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உயர்தர சிகிச்சைகள் கிடைப்பதை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, பிஹாரின் தர்பங்கா நகரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் இதர வளர்ச்சி திட்டங்கள் ரூ.12,100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இது இப்பகுதியில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும். இதன் மூலம் பிஹாரின்...
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக சகோதரி பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வயநாட்டில் சுற்றுலா மேற் கொண்டார். அப்போது அவர் மிக நீளமான ஜிப் லைனில் சாகச பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் கனமழை காரணமாக வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும்...
தெலங்கானா மாநிலம், பெத்தபல்லி மாவட்டம், பெத்தபல்லி-ராமகுண்டம் தடத்தில் ராகவபூர் அருகே நேற்று முன்தினம் இரவு இரும்புகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் 11 பெட்டிகளுடன் தடம் புரண்டது. வேகமாக சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கிடையே இருந்த லிங்க் அறுந்து போனதால் ஒன்றோடொன்று மோதி பெட்டிகள் தடம் புரண்டன. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் 3 ரயில்தண்டவாளங்கள் நாசமடைந்தன. இதனால் டெல்லி, சென்னைக்குசெல்லும் ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு...
டெல்லியில் ரியல் எஸ்டேட், நகைக்கடை, வாகன விற்பனை, இனிப்பு விற்பனை என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த ஆண்டில் சராசரியாக இருதினங்களுக்கு ஒருவர் என பல கோடி ரூபாய் கேட்டு இந்த மிரட்டல்கள் வருகின்றன. இவர்களில் சிலர் அலுவலகம் அல்லது வீடு முன் துப்பாக்கிகளால் குண்டுமழை பொழிந்தும் மிரட்டப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி காவல் நிலையங்களில் புகார்களும் பதிவாகி உள்ளன. இந்த மிரட்டல்களை டெல்லியின்...
உ.பி.யில் தவணை முறையில் லஞ்சம் வாங்கிய மாநில சிறு பான்மையினர் நலத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். உ.பி.யில் பரேலி மாவட்டம் தானா பஹேடி கிராமத்தை சேர்ந் தவர் ஆரிஷ். இவர் ராஜ்புரா என்ற இடத்தில் இருந்து வசுந்தரா கிராமத்திற்கு மதரசாவை மாற்றுவது தொடர்பாக பரேலியில் உள்ள மாநில சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். இது தொடர்பான கோப்பு 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பரேலி சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் சீனியர்...
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வரும் 26-ம் தேதி திறந்துவைக்கிறார். இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள அதிநவீன வழிகாட்டி ரோபா சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரம் சதுர...
உத்தரப்பிரதேசத்தில் கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இடிக்கும்போது, 15 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு...