ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 64.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா...
அல்-காய்தா தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக கர்நாடகா உட்பட 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்படும் அல்-காய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கால் ஊன்ற முயற்சி மேற்கொள்வதாகவும், அல்-காய்தாவுக்காக இந்தியாவில் நிதி திரட்டி வருவதாகவும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா, மேற்குவங்கம், பிஹார், திரிபுரா, அசாம், காஷ்மீர் ஆகிய 6...
மகாராஷ்டிராவின் யவத்மால் விமான நிலையத்தில் உத்தவ் தாக்கரே பைகளை சோதனையிட்டது வழக்கமான நடைமுறை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் உத்தவ் தாக்கரேவின் பைகள் கடந்த 2 நாட்களில்...
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் காங்.சார்பில் 9 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி: அஜித் பவாரின் என்சிபி 5 பேருக்கு வாய்ப்பு
admin - 0
சட்டப்பேரவை தேர்தலுக்கு மகாராஷ்டிரா தயாராகி வரும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இங்கு மொத்தப் போட்டியாளர்களில் 10% மட்டுமே முஸ்லிம்கள்.
மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு போட்டியிடும் 4,136 வேட்பாளர்களில் 420 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (218 பேர்) சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர்.
பிரதான கட்சிகள் முஸ்லிம்கள் சிலரையே களமிறக்கியுள்ளன. காங்கிரஸ் 9...
தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்: ராகுல், கார்கே மீது வழக்கு பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்
admin - 0
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சார பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி வருவதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜகவுக்கு எதிராக தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடன் அவதூறான பிரச்சாரங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு...
திருமலையில் வரும் 17-ம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வனபோஜன உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வரும் 17-ம் தேதி இந்த உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை சிறிய கஜவாகனத்தில் மலையப்பர் பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுவார். இதுபோல் ஒரு பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியும் ஊர்வலமாக வருவர். அந்த...
முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு திட்டம் இல்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம்
admin - 0
கர்நாடகாவில் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு செய்வதில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த நடவடிக்கையை விமர்சித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "காங்கிரஸ்...
மகாராஷ்டிர தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்பட வாய்ப்பு
admin - 0
மகாராஷ்டிராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் மகா யுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கூட்டணியிலும் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படவில்லை. இச்சூழலில், இரண்டு கூட்டணிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சித் தலைவர்கள் முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ளனர்.
எனினும், எம்விஏ கூட்டணியில் சிவசேனாவின் (யூபிடி) உத்தவ் தாக்கரேவும், மகா யுதியில் சிவசேனாவின்...
ஜம்மு-காஷ்மீர் என்கவுன்ட்டரில் உயிரிழந்த ராணுவ அதிகாரி ராகேஷ் குமாரின் உடலுக்கு இமாச்சல் மக்கள் கண்ணீர் அஞ்சலி
admin - 0
ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி ராகேஷ் குமார் உயிரிழந்தார்.
இவரது உடல் அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பரோங் கிராமத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது.
ஜெய் ஹிந்த் என உணர்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பியதுடன் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ராகேஷ் குமாரின்...
ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல்: 43 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு பதிவு
admin - 0
ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20...










