Google search engine
கழுதைப் பண்ணை வைத்தால் பெரும்லாபம் அடையலாம் என ஏமாற்றி ஹைதராபாத்தில் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த போலி கழுதைப் பண்ணை நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது. சமீப காலமாக கழுதைப் பால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லதுஎன மக்கள் நம்ப தொடங்கி உள்ளனர். இதனால் கழுதைப்பாலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை குடிப்பதின் மூலம் உடம்பில் நோய்எதிர்ப்பு சக்தி பெருகும் என மக்கள்நம்புகின்றனர். ஆனால், இதில்...
டெல்லி ரோகினி பகுதியில் 72 வயது முதியவர் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணியாற்றிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அண்மையில் அவரது செல்போனில் ஓர் அழைப்பு வந்துள்ளது. வீடியோ காலில் பேசிய மர்மநபர், “தைவானில் இருந்து உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது. மும்பை விமான நிலையத்தில் போதை பொருள் பார்சல் சிக்கி உள்ளது. போதைபொருள் கடத்தல்வழக்கில் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம்"...
சாமானிய மக்களின் ஆவணங்களைக் கொண்டு வங்கிக் கணக்குத் தொடங்கி ரூ.100 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக மாலேகானைச் சேர்ந்த சிராஜ் அகமது ஹாரூன் என்பவர் மீது கடந்த வாரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அவர் தொடர்புடைய 23 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. சிராஜ் அகமது டீ மற்றும் குளிர்பானம் விற்பனை உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர்...
டெல்லியில் கடந்த 2 நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக இருந்தது. நேற்று மிக மோசமான நிலைக்கு சென்று கடும் பனிமூட்டம் நிலவியது. டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. இது மிக மோசமான காற்று மாசு நிலை. நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை...
தலைநகர் டெல்லியில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருத்தல், திருட்டு, சட்டவிரோத மதுபானம், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ‘ஆபரேஷன் கவச்’ என்ற பெயரில் டெல்லி போலீஸார் 24 மணி நேர சோதனை நடத்தினர். டெல்லியில் 874 இடங்களில் நவம்பர் 12 முதல் 13 வரை டெல்லி போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 1,224 பேர் சிக்கினர். இவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் கைது...
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நர்சிபுராவில் ரூ.470 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது: எனது தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி வருகிறது. பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 50 பேரிடம்...
கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் புறநகர் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினருக்கு சொந்தமான 404 ஏக்கர் நிலத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோருவதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டித்து அந்த நிலத்தின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே முனம்பம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை சந்தித்தபின் கூறியதாவது: வக்பு நிலம் என்ற பெயரில் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க நில மாபியாக்கள் முயற்சி...
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சரான அனிதா மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஐடி பிரிவினர் அநாகரிகமான பதிவுகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டதாக புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக தற்போது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின்பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண்,...
ஹரியானாவில் பாஜகவுக்கு வெற்றி தந்த, ‘பிரிந்தால் இழப்பு' எனும் கோஷம் மகாராஷ்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ல் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் மகா யுதி கூட்டணிக்கு ஆதரவாக, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது உரையில் ‘பட்டேங்கே தோ கட்டங்கே' (பிரிந்தால் இழப்பு) எனும் கோஷத்தை தவறாமல் எழுப்பி வருகிறார்....
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் உள்பட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் 4 வார காலத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொத்து பிரச்சினையால், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு வெட்டிக்...