உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று...
பாதுகாப்பு படைகளின் போர்த் திறன் மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை ஊக்குவிக்கும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இந்தியா 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: ஆயுதப் படைகளுக்கு தேவையான போர்க் கருவிகள் மற்றும் போர்த் திறனை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து ரூ.63,000 கோடி...
இந்த ஆண்டில் பார்க்க வேண்டிய முதல் 52 இடங்கள் பட்டியலில் அசாம் மாநிலம் 4-ம் இடம் பிடித்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அழகு, உயர்வான கலாச்சாரம், பசுமையான தேயிலை தோட்டங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள அசாம் மாநிலம், இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவம் கிடைப்பது நிச்சயம். இந்நிலையில், இந்த ஆண்டில் உலக அளவில்...
வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சச்சின் பைலட் நேற்று கூறியதாவது: டெல்லி பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வரும்பட்சத்தில் " யுவா உடான் யோஜனா" திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நன்றாக படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் டெல்லி இளைஞர்களுக்காக இந்த திட்டம்...
ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை சோன்மார்க் மலைப்பாதை இணைக்கிறது. வளைந்து, நெளிந்து செல்லும் இந்த மலைப் பாதையில் காஷ்மீரில் இருந்து லடாக் செல்ல பல மணி நேரமாகும். அதோடு பனிக்காலத்தில் பனிப்பொழிவு, மழைக்காலத்தில் நிலச்சரிவு காரணமாக சோன்மார்க் மலைப் பாதை மூடப்படும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண காஷ்மீரின் சோன்மார்க் பகுதியில் கடந்த 2023-ம்...
இந்தியாவில் 7 சதவீதம் பேர் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 'போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு' என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று முன்தினம் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வடஇந்தியாவின் யூனியன் பிரதேசங்களில்...
சத்​தீஸ்கர் மாநிலத்​தில் போலீ​ஸார் நடத்திய என்க​வுன்ட்​டரில் மாவோ​யிஸ்ட்கள் 3 பேர் உயிரிழந்​தனர். ஏராளமான ஆயுதங்​கள், வெடிபொருட்கள் கைப்​பற்​றப்​பட்​டுள்ளன. சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்​பூர் மாவட்​டத்​தில் தேசிய பூங்கா​வுக்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதி​யில் கடந்த சனிக்​கிழமை மாவோ​யிஸ்ட்கள் மறைத்து வைத்​திருந்த வெடிபொருள் வெடித்து சிதறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்​டிருந்த சிஆர்​பிஎப் படை வீரர் ஒருவர் அதில் சிக்கி படுகாயம் அடைந்​தார். அவர் பிஜப்​பூர் மாவட்ட அரசு மருத்​துவ​மனை​யில் சிகிச்சை பெற்று...
உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா இன்று தொடங்க உள்ள நிலையில், ஏஐ கேமரா, என்எஸ்ஜி கமாண்டோ உட்பட உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது. 12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் இந்த விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர்...
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் அனுபம் கேர் உடன் சாலை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். அப்போது, கட்கரி கூறும்போது, “சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக (1 மணி நேரத்துக்குள்) மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் அவர்களுடைய உயிரை காப்பற்ற முடியும். இத்தகைய...
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். 12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பவுர்ணமி என்பதால் கங்கை, யமுனை, சரஸ்வதி...