Google search engine
குண்டூர்: ஆந்திராவில் நேற்று 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனினும் பேருந்தை ஒரு வயலில் இறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றி, அவர் மரண மடைந்தார். ஆந்திர மாநிலம், குண்டூர் அடுத்துள்ள பாபட்லா பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சாம்பசிவ ராவ் (48). இவர் வழக்கம்போல் நேற்று காலை ரேபல்ல எனும் ஊரில் இருந்து சீராலா எனும் ஊருக்கு பேருந்தில் பயணிகளுடன் புறப்பட்டார். பேருந்தில் சுமார்...
புதுடெல்லி: பாஜக கட்சியின் முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவை நேற்று புதுப்பித்தார். பாஜக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல் நாளிலேயே 47 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர். கடந்த செப்டம்பர் 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்ற முதல்கட்ட உறுப்பினர் சேர்க்கையில் 6 கோடி பேர் பதிவு செய்து கொண்டனர். உத்தர பிரதேசம்,...
புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங் களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் காற்று தர மேலாண்மை ஆணைத்தின் உத்தரவுகள், குறிப்பாக தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஏ.ஜி. மசிக், ஏ.அமானுல்லா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது...
புதுடெல்லி: மும்பை அந்தேரியில் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு, சிறையில் இருக்கும் சர்வதேச கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார். பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்லவிருப்பதாக கடந்த 2018-ல் லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்தார். சல்மானை கொலைசெய்யும் லாரன்ஸ் கும்பலின்முயற்சி 2 முறை முறியடிக்கப்பட் டுள்ளது. மும்பை பாந்த்ராவில் நடிகர் சல்மான்கான் வசிக்கும்அடுக்கு மாடி குடியிருப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் ஏற்கெனவே மத்திய...
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார். ஜம்மு-காஷ்மீரில் மொத்த முள்ள 90 தொகுதிகளுக்கு மூன்றுகட்டங்களாக நடைபெற்ற பேரவைதேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் ஓரிடத்தில் வென்றன. இந்நிலையில், இக்கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும், ஆம் ஆத்மியும் கட்சி எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தெரிவித்ததால் அந்தக்...
திருப்பதி: வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-நெல்லூர் இடையே இன்று காலை கரையை கடக்க கூடுமென விசாகப்பட்டினம்வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் சித்தூர், திருப்பதி, நெல்லூர் மற்றும் கடப்பாவுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை இலாகாவின் எச்சரிக்கையால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் மட்ட அரசுஅதிகாரிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும்...
பெங்களூரு: ரசிகர் கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் (44) தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய ரேணுகா சுவாமி (33) என்ற ரசிகரை கடத்தி கொலை செய்ததாக கடந்த ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் மேலாளர்...
புதுடெல்லி: சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளஅமெரிக்காவிடம் இருந்து ரூ.32,000 கோடி மதிப்பில் 31 ப்ரீடேட்டர் டிரோன்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க தயாரிப்பான எம்க்யூ-9பி ப்ரீடேட்டர் டிரான்களை தற்போது அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் நோட்டோ நாடுகள் சில பயன்படுத்துகின்றன. செயற்கைகோள் கட்டுப்பாட்டில் நீண்டநேரம் பறக்கும் இந்த டிரோன்கள் ஆப்கானிஸ்தான் உட்பட சில நாடுகளில் மிகதுல்லிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ‘ஹன்ட்டர் -கில்லர்’ டிரோன்கள் ‘ஹெல்ஃபயர்’...
புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சஷாங்க் ஜே. ஸ்ரீதரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் ஆஜரானார். அப்போது அவர் வாதிடும்போது, “தேர்தல்பிரச்சாரத்தின்போது பல்வேறு இலவசப் பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிக்கின்றன. இந்த இலவசப் பொருட்களை...
லக்னோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது பெண் குழந்தையை ரயில்வே போலீஸார், உ.பி. போலீஸார் சுமார் 16 கிலோமீட்டர் தேடி மீட்டனர். உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் தடத்தில் அண்மையில் தந்தையுடன் ரயிலில் பயணம் செய்த 8 வயது பெண் குழந்தை எமர்ஜென்சி ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்துவிட்டது. இதையடுத்து, உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு அந்த குழந்தையின் தந்தை தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு அங்கு...