வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது அமெரிக்க செயற்கைக்கோள் ‘புளூபேர்ட்’ – இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
admin - 0
முன் எப்போதும் இல்லாத அதிக எடை கொண்ட அமெரிக்காவின் புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள், மொபைல் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக விண்வெளி அடிப்படையிலான...
உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக முகமது அக்லாக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வாக்குமூலங்கள் முரண்பாடாக இருப்பதால் வழக்கை திரும்பப் பெற அம்மாநில அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லாக்(52) என்பவர், தனது வீட்டின் பிரிஜ்ஜில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து கடந்த செப்டம்பர் 28, 2015 இல்...
“சமாதானப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு, சிவசேனா (யுபிடி) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிகள் தங்கள் ஆதரவை இழந்துவிட்டன. அவர்கள் ஒன்று சேர்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், “சிவசேனா (யுபிடி) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிகள் தங்களின் இந்த ஒன்றிணைவு பற்றி செயற்கையாக ஒரு பரபரப்பை உருவாக்க முயற்சிக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே...
ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலை இணைந்து எதிர்கொள்ளப் போவதாக சிவ சேனா (உத்தவ் தாக்கரே), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன.
மகாராஷ்டிராவின் முக்கிய மாநில கட்சிகளாக சிவ சேனா (யுபிடி), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை விளங்கி வருகின்றன. உத்தவ் தாக்கரேவுக்கும் ராஜ் தாக்கரேவுக்கும் இடையே இருந்த பகை காரணமாக இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டு வந்தன.
இந்நிலையில், வரக்கூடிய மகாராஷ்டிர உள்ளாட்சித்...
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, 'தி இந்து' நாளிதழில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) புல்டோசர் அழிப்பு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக, டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக கடந்த 2005-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இது அனைவருக்கும் நல்வாழ்வு...
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபிர் முர்சிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஜனதா உன்னயன் என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று தொடங்கினார். இதுகுறித்து பெலதங்காவில் அவர் கூறும்போது, ‘‘எனது கட்சி சார்பில் 8 வேட்பாளர்கள் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் நிறுத்தப்படுவர். நான் ரெஜிநகர் மற்றும் பெலதங்கா...
“இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!
admin - 0
ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது.
பெர்லின் நகரின் ஹெர்டி பள்ளியில், மாணவர்கள் மத்தியில் சுமார் 1 மணி நேரம் ராகுல் காந்தி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும்...
வங்கதேசத்தில் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பினர் இன்று டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு முன்பு நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில், காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்தனர்.
வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் உள்ள...
நாளை (டிசம்பர் 24) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தெரிவித்தார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர். இதன் பின்னர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில்,...
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் நேற்று பூஜ்யநேரத்தின்போது திருச்சி சிவா பேசியதாவது: தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கீழடி பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் இந்த ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் நடத்தப்பட்டு வந்தன.
ஆய்வு தொடங்கிய...
