Google search engine
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. 4-ம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அதிபர்...
மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்த தமிழக அரசின் ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலவசத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடும். இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அறிஞர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் டி.ஹரிஷ்குமார் தாக்கல் செய்த...
பிஹாரில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் எஸ்ஐஆர் பணிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. இதன் படி ஆந்திரா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாத்ரா நாகர்...
கர்​நாட​க மாநிலம் துமக்​கூரு மாவட்​டத்​தில் உள்ள குனிகல் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ ரங்​க​நாத் பெங்களூருவில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: "கர்நாட​கா​வில் மண்​டி​யா, துமக்​கூரு, ஹாசன், ஷிமோகா உள்ளிட்ட மாவட்​டங்​களில் விவ​சா​யத்​தில் ஈடு​பட்​டுள்ள ஆண்களை திரு​மணம் செய்​து​கொள்ள பெண்​கள் யாரும் முன்வரு​வ​தில்​லை. இதனால் 35 வயதை கடந்த போதும், ஆண்​கள் திரு​மணம் செய்யாமல் தனித்து வாழ வேண்​டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவ​சா​யிகள் மணப்​ பெண்​களை தேடி கேரளா, தமிழ்நாடு, ஆந்​திரா...
ரம்ஜான் மாத நோன்பு நேரத்துக்காக மசூதிகளின் அன்றாட அறிவிப்பின் மீது தனது நிலைப்பாட்டை உத்தரப் பிரதேச அரசு தெளிவுபடுத்தியது. இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏவான கமல் அக்தர் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து உ.பி சட்டப்பேரவையின் பூஜ்ஜிய நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவான கமல் அக்தர் எழுப்பிய கேள்வியில், “ஹோலி, தீபாவளி, தசரா, கன்வார் யாத்திரை மற்றும் கிறிஸ்தவ மற்றும் சீக்கிய கொண்டாட்டங்கள் உட்பட அனைத்து மதங்களின்...
மகாராஷ்டிராவில் கடந்த 2014ல் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டது. இந்த உத்தரவு மத அடிப்படையிலானது என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 % இடஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுவதாக உள்ளது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் அவசர சட்டத்தை அமல்படுத்துவதை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 2014 தேர்தலுக்கு...
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார். இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். அத்துடன் மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகளைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மிக ஆபத்தான மனிதராக ராகுல் காந்தி இருக்கிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், ஜார்ஜ் சோரஸ் போன்றவர்களை ராகுல் காந்தி...
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அந்நகரில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறித்து லக்னோவின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) விரிவான ஆய்வு நடத்தியது. ‘பொருளாதார மறுமலர்ச்சி’ என்ற தலைப்பிலான இதன் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி, ராமர் கோயில் திறப்பதற்கு முன் அயோத்திக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.7 லட்சம் பேர் வருகை தந்தனர். இது, 2024-ம் ஆண்டு ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்கு பிறகு, முதல் 6 மாதங்களிலேயே...
சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் அதி​காரப்​பூர்வ ‘சாம்​னா' நாளிதழில் ஒரு தலை​யங்​கம் வெளி​யாகி​யுள்​ளது. அதில், “காங்​கிரஸ் மற்​றும் தேசத்​தின் உச்ச தலை​வ​ராக மகாத்மா காந்தி இருந்​தார். காந்​திக்கு ஒரு உள் குரல் இருந்​தது. அது, அவரது முடிவு​களை வழி நடத்​தி​யது. ஆன்​மீகம், தேச பக்தி மற்​றும் தன்னலமின்​மை​யால் அம்​முடிவு​கள் கூர்​மைப்​படுத்​தப்​பட்​டன. இன்​று, காங்​கிரஸுக்​குள் பல ‘உள் குரல்​கள்’ உரு​வாகி குழப்பத்தை ஏற்படுத்​துகின்​றன. இது நாட்​டுக்கு ஆரோக்கியமானது அல்ல. தமிழகம் உட்பட 5 மாநிலங்​களில்...
திருப்​பதி அருகே உள்ள மதனபல்​லியை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 16-ம் தேதி காணா​மல் போனார். இதையடுத்து அவரது பெற்​றோர் பல இடங்​களில் தேடிய பின்​னர் போலீ​ஸில் புகார் கொடுத்​தனர். மதனபல்லி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தனர். வீட்டின் அருகே இருந்த கண்​காணிப்பு கேம​ரா​வில் பதிவானவற்றை கொண்டு ஆய்வு செய்​த​ போது சிறுமி​யின் பக்கத்து வீட்​டில் வசிக்​கும் குல​வர்​தன் என்​பவர், சிறுமியை அழைத்​துச் சென்​றது தெரிய​வந்​தது. இதைத்...