உ.பி.யில் ஆஸி. வெஸ்டர்ன் சிட்னி பல்கலை. கிளை: மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
admin - 0
கடந்த 2020-ம் ஆண்டில் மத்திய கல்வித் துறை அமைச்சகம் சார்பில், புதிய கல்விக் கொள்கை அமலானது. இதில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, குஜராத்தின் காந்தி நகரில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாக, ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் (Deakin University) சர்வதேச கிளையை தொடங்கியது.
குஜராத்தில் 2-வதாக ஆஸ்திரேலியாவின் உல்லாங்காங் பல்கலைக்கழக (Wollongong University) கிளை அமைக்கப்பட்டது. மூன்றாவதாக ஹரியானாவின் குருகிராமில் பிரிட்டனின் சவுத்தாம்டன் பல்கலைக்கழகம் (University...
உ.பி.-ம.பி. போலீஸாரின் எல்லை அதிகார வரம்பு இழுபறியால் விபத்தில் மரணமடைந்தவரின் உடல் 4 மணி நேரத்துக்குப் பிறகு மீட்பு
admin - 0
உத்தர பிரதேச மற்றும் மத்திய பிரதேச போலீஸாரின் எல்லை அதிகார வரம்பு தொடர்பான இழுபறியால் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் உடல் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது. போலீஸாரின் இந்த மனிதாபிமானமற்ற செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
27 வயதான ராகுல் அகிர்வாருக்கு அண்மையில்தான் திருமணம் முடிந்தது. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக டெல்லிக்கு வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார். இவரது கெட்ட நேரம் சாலையை கடக்கும்போது...
பாலாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்ட அறிவிப்பு
admin - 0
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குப்பம் தொகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றார். குப்பம் திராவிட பல்கலைக்கழக வளாகத்தில் ‘சுவர்ண குப்பம் விஷன் -2029’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவுக்கு நான் முதல் வராக இருந்தாலும், குப்பம் தொகுதி மக்களுக்கு நான் எம்.எல்.ஏ.தான். என்னை 8 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
கடந்த...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சத்தீஸ்கர் காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் குரூப் (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது....
சென்னை, பெங்களூரு, குஜராத்தில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு: நிபுணர்கள் சொல்வது என்ன?
admin - 0
தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உட்பட நாட்டில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண வைரஸ்தான், அச்சப்படத் தேவையில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக உலகம் மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும்...
2025 புத்தாண்டு நாளில் இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை பிறந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 12.03 மணிக்கு பிறந்த பெண் குழந்தை இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை என்று அறியப்படுகிறது. மிசோரம் மாநிலம் அய்ஸ்வாலில் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு ஃப்ராங்கி ரெமுராடிகா ஜடேங் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறக்கும்போது 3.12 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மகப்பேறு...
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும் என ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் நிலை இருப்பதாக எச்சரித்துள்ளதாகவும் தகவல்.
அண்மைய காலமாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு...
பிஹார் மாநிலத்தில் முன்பு லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மெகா கூட்டணியில் அங்கம் வகித்தது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்தார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் லாலு பிரசாத் பேசுகையில் "கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாகவும், முந்தைய கசப்பு உணர்வுகளை மறந்து நிதிஷ் குமார்...
கடந்த 1984-ல் நடந்த சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 88 பேருக்கு வேலைவாய்ப்பில் சலுகை தர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி, கல்வித் தகுதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல வயது வரம்பு 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பணியில் பல்நோக்கு திறன் ஊழியர் (எம்டிஎஸ்) பணிக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக, கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி...
ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் நேற்று மர்ம ட்ரோன் பறந்தது. இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவின் புரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நேற்று அதிகாலை 4.10 மணிக்கு மர்ம ட்ரோன் பறந்தது. சுமார் 100 அடி உயரத்தில் அரை மணி நேரம் ட்ரோன் வட்டவடித்தது. இதனை பலர் வீடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
புரி...










