டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப். 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். இஸ்ரோவின் 11-வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வி.நாராயணன் இஸ்ரோ...
உண்ணா விரதம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங்கின் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்கக் கோரி, பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு மருத்துவ சிகிச்சை...
பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு பள்ளி, வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீத தள்ளுபடி வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் 1,000 ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர். அந்த மாநிலத்தின் ஹர்தா மாவட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 894 பெண்கள் மட்டுமே உள்ளனர். கருவில் இருக்கும் குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிந்து, பெண் சிசுவை அழிக்கும் சம்பவங்கள் ஹர்தா மாவட்டத்தில் அதிகரித்து...
டிஜிட்டல் அரஸ்ட் என்ற மோடிக் கும்பலிடம் தான் சிக்கியது எப்படி என்பது குறித்து பிரபல யூடியூபர் விளக்கியுள்ளார்.
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர் அங்குஷ் பஹுகுணா. இவர், அண்மையில் ஒரு டிஜிட்டல் அரஸ்ட் கும்பலிடம் சிக்கி தனது பணத்தை இழந்துள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகாரும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
டிஜிட்டல் அரஸ்ட் கும்பலின் பல்வேறு மோசடிகள் குறித்து தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், நானே அந்த கும்பலிடம்...
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் போலீஸார் மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த டிசம்பர் 4-ம் தேதி இரவு ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்பவர் உயிரிழந்தார். நெரிசலில் படுகாயமடைந்த இவரது மகன் ஸ்ரீதேஜ் (9) ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதி குடும்பத்துக்கு தெலங்கானா அரசு சார்பில் ரூ. 25...
டெல்லியில் ரூ.33 கோடியில் முதல்வர் இல்லம் புதுப்பிப்பு: தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் குற்றச்சாட்டு
admin - 0
டெல்லி முதல்வர் அரசு இல்லம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மீறி ரூ.33 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி வகித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தை புதுப்பிக்க கோடிக்கணக்கான ரூபாயை வீணாக செலவு செய்ததாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி)...
அசாமின் கலாமதி நகர் அருகே உம்ரங்சூ பகுதி உள்ளது. அங்கு நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. சுரங்கத்தின் ஒரு பகுதியில் நேற்று 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்துக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த சுரங்கம் சட்டவிரோத மாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 300 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் இறைக்கப்படுகிறது. தேசிய மற்றும்...
தனது தந்தை குறித்து பாஜக மூத்த தலைவர் அவதூறாக பேசியதாக டெல்லி முதல்வர் ஆதிஷி செய்தியாளர்களுக்கு கண்ணீர்மல்க பேட்டியளித்தார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி, கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி களமிறங்கி உள்ளார். இவர் 3 முறை எம்எல்ஏ ஆகவும் 2 முறை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.
ரமேஷ் பிதுரி அண்மையில் பேசும்போது,...
ஆம்புலன்ஸ் மோதியதில் 3 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் இருந்து ஒரு குழுவினர் மஞ்சள் ஆடை தரித்து ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு புறப்பட்டனர். இவர்கள் கும்பலாக பீலேர் பகுதி வழியாக நந்து வந்து கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை இந்த குழுவினர் திருப்பதி அருகே சந்திரகிரி மண்டலம், நரசிங்காபுரம் எனும் இடத்தில் வரிசையாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அதே சமயம், மதனபல்லியில் இருந்து அவசர அவசரமாக 108...










