சீனாவில் ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சீனாவில் எச்எம்பிவி தொற்று பரவியுள்ளதாக வந்த தகவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த தொற்று கடந்த 2001-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது கேரளா உட்பட உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்த தொற்று இதற்கு முன்பும் கேரளாவில்...
குஜராத்தின் போதாத் மாவட்டம் ஜம்ரலா கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர், கடந்த மாதம் 30-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனது இறப்புக்கு காரணமான மனைவிக்கு பாடம் புகட்டுங்கள் என தனது குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து இறந்தவரின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். அதில், “தனது மகனிடம் மருமகள் அடிக்கடி சண்டையிட்டு...
மும்பையில் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் அஸ்ரப் என்று அழைக்கப்பட்ட சப்னா தீதி. இவர் மெஹ்மூத் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனது கணவருக்கு நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பிருப்பது அப்போது அவருக்கு தெரியாது.
மெஹ்மூத் கான் துபாய் சென்று திரும்பியபோது மும்பை ஏர்போர்ட்டில் வைத்து சப்னா கண் முன்பாகவே கூலிப்படை அவரை சுட்டுக் கொன்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சப்னா தனது கணவரின் சாவுக்கு யார்...
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் ஊழல் ஆட்சி அகற்றப்படும். பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நமோ பாரத் ரேபிட் ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி சுமார் 100 கி.மீ. முதல் 250 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்படி தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசத்தின் மீரட் நகரங்களுக்கு இடையிலான...
டெல்லி ரயில் நிலையத்தின் இலவச சக்கர நாற்காலியை பயன்படுத்த , வெளிநாட்டு வாழ் இந்திய பெண்-ஐ ஏமாற்றி ரூ.10,000 வசூலித்த சுமை தூக்கும் தொழிலாளியின் உரிமத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.
குஜராத்தில் பிறந்தவர் பாயல். இவர் லண்டனில் வசிக்கிறார். இவர் தனது வயதான தந்தையுடன் ஆக்ரா செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்துக்கு கடந்த மாதம் 21ம் தேதி வந்தார். அங்கு சுமை தூக்கும் தொழிலாளி உதவியுடன் தன் தந்தையை...
உத்தர பிரதேசத்தில் கள்ளநோட்டு அச்சடித்து, தனது 3 மனைவிகள் மூலம் புழக்கத்தில் விட்ட மதரஸா மேலாளரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசம் சிராவஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் நூரி என்ற முபாரக் அலி. இவர் இங்குள்ள மதரஸா ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார். இவருக்கு 3 மனைவிகள். அதில் ஒருவர் மதரஸாவில் பணியாற்றுகிறார். இந்நிலையில் மதரஸாவின் ஒரு அறையில் கள்ள நோட்டுக்களை நூரி அச்சிட்டுள்ளார். கள்ளநோட்டுகளை தனது மனைவிகள்...
திரையரங்கு நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் நாம்பல்லி நீதிமன்றம் நேற்று ரெகுலர் ஜாமீன் வழங்கியது.
ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி இரவு புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. இந்த சிறப்பு காட்சிக்கு படத்தின் கதாநாயகன் நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி (35) என்பவர் உயிரிழந்தார். இவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ்...
மகா கும்பமேளாவில் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட இருப்பதாக வந்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி. முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உ.பி.யின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வரும் ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா முப்தி ஷகாபுத்தீன் ரிஜ்வீ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகா கும்பமேளாவில் நூற்றுக்கணக்கான...
வட இந்தியாவில் 2-வது நாளாக தொடரும் அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான போக்குவரத்து பாதிப்பு
admin - 0
வட இந்தியாவின் சில பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் அடர்ந்த பனி மூட்டம் நிலவியது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிறுவனம் (DIAL) அதிகாலை 12.05 மணிக்கு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "அடர் பனி மூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகளின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணைகளை பயணிகள் தெரிந்து கொள்ள சம்மந்தப்பட்ட விமான நிறுனங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அசவுகரியம்...
போபால் விஷவாயு விபத்து ஏற்பட்டு 40 ஆண்டுக்குப் பிறகு யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து நச்சுக்கழிவுகள் அகற்றம்
admin - 0
மத்திய பிரதேச மாநிலத்தில் யூனியன் கார்பைடு ஆலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருக்கும் நச்சுக்கழிவுகளை அகற்றும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-3 இடைப்பட்ட இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையிலிருந்து அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசயனைட் (எம்ஐசி) வாயு கசிவு ஏற்பட்டதில் 5,479 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் நீண்ட கால உடல்நலப் பிரச்சினைக்கு...










