கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் 2 பெண்கள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, அவர்களை பிடித்து சோதனையிட்டதில் ரூ.75 கோடி மதிப்புள்ள 37.870 கிலோ மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்...
இந்துத்துவா அமைப்புகளின் மிரட்டல் எதிரொலி: மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் சமாதிக்கு பலத்த பாதுகாப்பு
admin - 0
மகாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்றப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் அறிவித்துள்ளதை தொடர்ந்து அதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ எனும் பெயரில் திரைப்படமாகி உள்ளது. இது தொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்தது. இதில், பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, அவுரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க என கோஷமிட்டார். இதனால், மார்ச்...
பஞ்சாபில் கோயில் மீது கையெறிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளில் ஒருவர் நேற்று போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் தாகுர்துவாரா பகுதியில் உள்ள இந்து கோயில் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் பைக்கில் வந்த இருவர் கையெறிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், குற்றவாளிகளை குர்சிதக், விஷால் என அடையாளம் கண்டனர். அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில்...
அமெரிக்காவில் நடைபெற்ற சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், டேகுலபல்லி பகுதியை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் மோகன்ரெட்டி. இவரது மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா தேவி. இவர்களுக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகளான பிரகதிக்கும், சித்திபேட்டையை சேர்ந்த ரோஹித் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 மகன்கள். ரோஹித், அவரது...
கடந்த 5 ஆண்டுகளில் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்தப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர்...
மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தமிழ்நாட்டுக்கு பயன் என்ன? – கனிமொழி எம்.பி. கேள்வி
admin - 0
‘மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன?’ என நேற்று மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விகளில், ‘மத்திய அரசின் திறன் இந்தியா மிஷன் என்ற இயக்கத்தில் வரும் திட்டங்களின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக என்ன?
குறிப்பாக...
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்புலி அருகே உள்ள பெண்ட கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். என்றாலும் இவர்களில் பலர் முறையாக பள்ளிக்கு வருவதில்லை, சரிவர படிப்பதில்லை என கூறப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பு அனைத்து மாணவ, மாணவியரையும் வழக்கம்போல் பள்ளி மேடைக்கு முன் தலைமை ஆசிரியர் ரமணா வரச்சொன்னார். பிறகு மாணவர்கள் முன் தரையில்...
கேதார்நாத் பகுதிக்கு இந்துக்கள் அல்லாதவர்கள் வர தடை விதிக்க வேண்டும் என கேதார்நாத் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம், கேதார்நாத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஆஷா நவுதியால் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “கேதார்நாத் பகுதி மக்களுடன் நான் கலந்துரையாடினேன். அப்போது, கேதார்நாத்துக்கு வரும் இந்துக்கள் அல்லாதவர்கள் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். எனவே, இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தப் பகுதிக்கு வர தடை விதிக்க வேண்டும். இப்பகுதி...
ம.பி.யின் சிவபுரி மாவட்டம், கொலாரஸ் பகுதியை சேர்ந்தவர் மந்திரவாதி ரகுவீர் தகாத். இவரிடம் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஆண் குழந்தை ஒன்றை அதன் பெற்றோர் கடந்த வியாழக்கிழமை கொண்டுவந்து காட்டியுள்ளனர்.
இதையடுத்து குழந்தைக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி ரகுவீர் தகாத் சடங்குகளை செய்துள்ளார். அப்போது அவர் குழந்தையை தலைகீழாக பிடித்து கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்கு மேலே காட்டியுள்ளார். இதில் குழந்தையின் கண்களில் காயம் ஏற்பட்டது. பின்னர், மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தையின் கண்கள்...
பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை. அந்த நாடு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த லெக்ஸ் பிரிட்மேன் (41), பிரபல கணினி விஞ்ஞானி ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களை அவர் நேர்காணல் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உக்ரைன் அதிபர்...










