வாராணசி மாவட்ட ஆட்சியரும் தென்காசியின் கடையநல்லூர் தமிழருமான ராஜலிங்கம் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறியதாவது: ‘வாராணசியின் வளர்ச்சிக்காக, நாட்டின் பல்வேறு முக்கிய பொதுநல அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இடப்பட்டு பல திட்டங்கள் செயலாகின்றன. இந்த பட்டியலில் ஒன்றாக இம்மாவட்டத்தில் 356 கிராமப்புற நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கிராமவாசிகள் படிக்கும் வகையில் நூல்களும், பயிற்சிபெறும் வகையில் இணையவசதிகளுடன் கூடியக் கணினிகளும் இடம்பெற்றுள்ளன.
கிராம நூலகங்கள் அமைக்க,...
வாராணசியில் ஊரக மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. இங்கு 130 குடிநீர்த் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், பிந்ரா பகுதியில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரி ஒன்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
ராம் நகர் பகுதியில் போலீஸார் தங்கும் விடுதி, மற்றும் நான்கு கிராம சாலைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சாஸ்திரி படித்துறை மற்றும் சாம்னே படித்துறை ஆகியவற்றில் ரயில்வே...
டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதி வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் சோதனையில் இது புரளி என தெரியவந்தது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதி வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு நேற்று காலையில் தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்....
பிஹாரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது சீவான், பெகுசாரை, பாகல்பூர், ஜெகனாபாத், முஷாபர்பூர், சகர்ஷா, மதேபூரா, சாப்ரா உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழந்தனர்.
பிஹாரின் நாளந்தா பகுதி, இஸ்லாம்பூரில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். விஷ்ணுபூர், நூர்சராய், செயின்புரா உள்ளிட்ட பகுதிகளில் சுவர் இடிந்து,...
கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.500 கோடி ஊழல் செய்திருப்பதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவர், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் மனு அளித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கவுடா. இவர், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மனுவை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015-ம் ஆண்டில் சுரங்கத்துக்காக நிலத்தை குத்தகைக்கு வழங்கியது, புதுப்பித்தது உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அப்போது முதல்வராக இருந்த சித்தராமையாவுக்கு...
காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். ஆனால், அரை இறுதிப் போட்டியின் கூடுதல் எடை காரணமாக அவர், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
இந்நிலையில், சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் சாதனை...
மும்பை 26/11 தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது. அவர், சிறப்பு விமானத்தில் இன்று இந்தியா அழைத்து வரப்படுகிறார்.
2008 நவ.26-ம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். சுமார் 60 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்....
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் தலைக்கு ரூ.26 லட்சம் விலை வைக்கப்பட்ட 4 பேர் உட்பட மொத்தம் 22 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரின் முன்பாக ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர்.
இதுகுறித்து பீஜப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் யாதவ் நேற்று கூறியதாவது: மாநில அரசின் "உங்களது நல்ல கிராமம்" என்ற திட்டமானது பாதுகாப்புப் படை முகாம்கள் அருகிலுள்ள தொலைதூர பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது.
இதன் மூலம் ஏராளமான...
ம.பி.யின் நர்மதாபுரம் மாவட்டம், பிபரியா என்ற இடத்தில் பகத் சிங் அரசு கல்லூரி உள்ளது. இக்கல்லூரி தேர்வு விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் ஒருவர் திருத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ராகேஷ் வர்மா, விடைத்தாள் திருத்தும் பணிக்கான பொறுப்பு அதிகாரி ராம்குலம் படேல் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஷ்வாஸ் சாரங் தெரிவித்தார்.
கல்லூரி முதல்வர் ராகேஷ் வர்மா கூறுகையில், “விடைத்தாள்...
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் பேசும்போது, "இந்துக்கள் திலகம் அணிகின்றனர். ஆனால் எப்போதும் பாவம் செய்கின்றனர்" என்றார்.
இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து மெஹ்ராஜ் மாலிக் - பாஜக எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவைக் காவலர்கள் மூலம் இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று 3-வது நாளாக அமளி ஏற்பட்டது. வக்பு...










