Google search engine
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக உ.பி.யின் சுல்தான்பூரில் பாஜக தொண்டர் ஒருவர் புகார் அளித்தார். இப்புகார் மீதான வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி கடந்த 2023 டிசம்பரில் சுல்தான்பூர்...
கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் மாநில அரசு பேருந்தின் நடத்துநர் மராத்தியில் பேசாததால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து நடந்துவரும் போராட்டத்தால் 3 நாட்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த 21-ம் தேதி மாநில அரசுப் பேருந்தின் நடத்துநர் மல்லப்பா ஹுக்கேரிக்கும் பேருந்தில் பயணித்த 15 வயது சிறுமிக்கும் இடையே கன்னடத்தில் பேசுவதா? மராத்தியில் பேசுவதா? என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த மற்ற...
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த 2023 நவம்​பரில் நடத்​தப்​பட்ட கேடிஎஸ் 2.0 வில் அகத்​தியர் பிறந்த நாள் விழா மற்றும் அவரை பற்றிய கருத்​தரங்கம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு கேடிஎஸ் நிகழ்ச்​சி​யில் அகத்​தியர் கருப்​பொருளாக தேர்வு செய்​யப்​பட்​டார். காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த வழக்​கறிஞர் ஷாமா பட்டின் பெற்​றோர், பல ஆண்டு​களுக்கு முன்பே கர்நாடகா​வுக்கு இடம் பெயர்ந்​துள்ளனர்....
‘‘​காங்​கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவை​யில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன’’ என்று கட்சி மேலிடத்​துக்கு சசிதரூர் எம்.பி. திட்​ட​வட்​ட​மாகக் கூறி​யுள்​ளார். கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் மக்களவை தொகுதி சசிதரூர் எம்.பி. காங்​கிரஸ் கட்சி​யின் மூத்த தலைவராக 4-வது முறை எம்.பி. பதவி வகிக்​கிறார். இவர் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை அவ்வப்​போது பாராட்டி வருகிறார். சமீபத்​தில் கூட பிரதமர் மோடி அமெரிக்​கா​வில் அதிபர் ட்ரம்ப்பை...
நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார். பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும்...
விண்வெளியில் பாரதம் 100-வது சதம் அடித்திருக்கிறது. சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1 என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரலின் 119-வது நிகழ்ச்சி வானொலியில் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கிரிக்கெட்டில் சதம் அடிக்கும்போது ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சியை நாம் அறிவோம். அதைவிட பெருமகிழ்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரோவின் 100-வது ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப்...
மகா கும்பமேளாவுக்கு இதுவரை 62 கோடி பக்தர்கள் வந்துள்ளனர் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் நடைபெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மாநாட்டுக்கு உங்களை வரவேற்கிறேன். இதையும் ஸ்டார்ட் அப் உலகின் யுனிகார்ன் மகா கும்பமேளா என அழைக்கலாம். ஆன்மீகமும்,...
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஓராண்டு சிறப்பு கொண்டாட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. நீதித் துறை உட்பட வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. சில...
இந்தியாவில் 7 திட்டங்களுக்கு 750 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான நிதியுதவியை அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டுக்கான நிறுவனம் (யுஎஸ்ஏஐடி) வழங்கி வருவதாக மத்திய நிதியமைச்சகம் அதன் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டுக்கான அறிக்கையில் நிதியமைச்சகம் கூறியுள்ளதாவது: இந்தியாவில் தற்போது 750 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏழு தி்ட்டங்கள் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2023-24-ம் நிதியாண்டில்...
சில அரசியல் தலைவர்கள் அந்நிய சக்திகளோடு கைகோத்து நாட்டை பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்து மதத்தையும் மகா கும்பமேளா உள்ளிட்ட இந்து பண்டிகைகளையும் விமர்சிக்கின்றனர். சமுதாயத்தில் பிரிவினையை தூண்ட முயற்சி செய்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் அமைந்துள்ளது. இந்த கோயில் அறக்கட்டளை சார்பில் கர்ஹாவில் ரூ.218 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பளவில்...