Google search engine
பழங்​கால நாண​யங்​களுக்கு ரூ. 2 கோடி வரை தரு​வ​தாக கூறி சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்த 65 வயது முதி​ய​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் மத்​திய பிரதேச மாநிலத்​தில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மத்​திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்​தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்​றில் காவலா​ளி​யாக வேலை​பார்த்து ஓய்வு பெற்​றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடை​யாளம் தெரி​யாத எண்​ணிலிருந்து அழைப்பு வந்​தது....
திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானத்தை சரி செய்ய பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர். இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபவதற்காக பிரிட்டிஷ் கடற்படையின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த மாதம் வந்தது. இதில் இருந்து புறப்பட்ட எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி...
ஆந்​திர மாநிலத்​தின் பிர​காசம் மாவட்​டம், நரசிம்​மாபுரத்​தில் குடிநீர் திட்​டத்​துக்கு துணை முதல்​வர் பவன் கல்​யாண் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: 2029-ல் ஆட்​சிக்கு வந்​ததும் எங்​களை ஒரு கை பார்ப்​போம் என முன்​னாள் முதல்​வர் ஜெகன் அடிக்​கடி மிரட்டி வரு​கிறார். சக மனிதர்​களை இவ்​வாறு மிரட்​டிய​தால்​தான் தனக்கு இந்த நிலைமை என்​பதை ஜெகன் இன்​ன​மும் புரிந்து கொள்​ள​வில்​லை. மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்ட நிதியை முந்​தைய ஜெகன்...
இந்திய ராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிகாப்டர்களில், முதல் 3 ஹெலிகாப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அபாச்சி கன்ஷிப்ஸ் ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இதில் இயந்திர துப்பாக்கி, வானிலிருந்து தரை இலக்குகளை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ‘வானில் இயங்கும் டேங்க்’ என அழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்கு 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள்...
உத்தர பிரதேச மாநிலத்​தில் ஸ்ரவண மாதத்தை முன்​னிட்டு காவடி யாத்​திரை தொடங்க உள்​ளது. யாத்​திரை செல்​லும் பாதைகளில் உணவகம் நடத்​தும் உரிமை​யாளர் பெயர் உள்​ளிட்ட விவரங்​களை அறி​விப்பு பலகை​களில் எழுதி வைக்க உ.பி. அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த உத்​தரவை அமல்​படுத்​துகின்​றனரா என்று பிரபல துறவி யோகா குரு யஷ்வீர் மஹராஜ் தனது 5,000 சீடர்​களு​டன் சோதனை நடத்தி வரு​கிறார். அதன்​படி உணவக பணி​யாளர்​களின் ஆடைகளை அவிழ்த்து சோதித்​தது சர்ச்​சை​யானது. எனினும்,...
 காங்​கிரஸ் கட்​சி​யின் ஊடக மற்​றும் விளம்​பரத் துறை தலை​வர் பவன் கேரா கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் தீவிர சிறப்பு திருத்​தங்​களை மேற்​கொண்​டுள்​ளது. இது, பிஹார் வாக்​காளர்​களின் வாக்​குரிமையை பறிப்​ப​தற்​கும் அவர்​களின் அடிப்​படை வாக்​களிக்​கும் உரிமையை மறுப்​ப​தற்​கும் திட்​ட​மிட்டு செய்​யப்​பட்ட சதி​யாகும். இதனால், 2 கோடி வாக்​காளர்​களின் வாக்​குரிமை கேள்விக்​குறி​யாகி உள்​ளது. அதி​காரம் என்​பது நிலை​யற்​றது. அது நாளை யார் கையில் வேண்​டு​மா​னாலும் வரலாம். நீங்​கள் ஏன் அவர்​களுக்கு...
கர்​நாட​கா​வில் பாஜக நிர்​வாகி பிர​வீன் நெட்​டூரு கொல்​லப்​பட்ட வழக்​கில் தலைமறை​வாக இருந்த அப்​துல் ரஹ்​மானை தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) அதி​காரி​கள் கேரளா​வில் உள்ள கண்​ணூர் விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர். கர்​நாடக மாநிலம் தக்​ஷின கன்​னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செய​லா​ளர் பிர​வீன் நெட்​டூரு (28) கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்​களால் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். தேசிய புல​னாய்வு முகமை வழக்​குப்​ப​திவு செய்​து, 14 பேரை கைது...
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ஃபிக்கி நிகழ்ச்சியில் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியதாவது: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதற்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் செயல்​படும் தீவிர​வாத...
பிஹாரின் பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் மகத் மகளிர் கல்லூரி, பாட்னா கல்லூரி, பாட்னா அறிவியல் கல்லூரி, வனிஜா மகாவித்யாலயா, பாட்னா சட்டக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன. புதிய முதல்வர்களை தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய ஆளுநர் மாளிகை...
மேற்கு வங்​க மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி​யில் முன்​னாள் மாணவர் மற்​றும் 2 சீனியர் மாணவர்​களால் 24 வயது மாணவி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட சம்​பவம் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் 3 பொதுநல வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. இந்த வழக்​கு​கள் நீதிபதி சவுமன் சென் தலை​மையி​லான அமர்வு முன் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது வழக்​கில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றம் குறித்து பிர​மாண...