இந்தியாவுக்கு முதல் 3 அபாச்சி ஹெலிகாப்டரை வழங்குகிறது அமெரிக்கா

0
46

இந்திய ராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிகாப்டர்களில், முதல் 3 ஹெலிகாப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அபாச்சி கன்ஷிப்ஸ் ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இதில் இயந்திர துப்பாக்கி, வானிலிருந்து தரை இலக்குகளை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ‘வானில் இயங்கும் டேங்க்’ என அழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்கு 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ரூ.13,952 கோடிக்கு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டு படையில் சேர்க்கப்பட்டன. இதில் ஒன்று கடந்தாண்டு லடாக்கில் தரையிறங்கும் போது பலத்த சேதம் அடைந்தது.

தரைப்​படை பயன்​பாட்​டுக்​காக 6 அபாச்சி ரக ஹெலி​காப்​டர்​கள் ரூ.5,691 கோடிக்கு வாங்க கடந்த 2020-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டது. அந்த ஹெலி​காப்​டர்​கள் விநி​யோகம் தாமதம் ஆகி வந்​தது. இது தொடர்​பாக அமெரிக்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​சேத்​திடம், இந்​திய பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கடந்த செவ்​வாய்கிழமை போனில் பேசி​னார். அப்​போது முதல் 3 அபாச்சி ஹெலி​காப்​டர்​களை இம்​மாத​மும், அடுத்த 3 ஹெலி​காப்​டர்​கள் நவம்​பர் மாத​மும் விநி​யோகம் செய்​யப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய ராணுவத்​தின் அபாச்சி ஹெலி​காப்​டர் படைப்​பிரிவு பாகிஸ்​தான் எல்​லையை ஒட்​டி​யுள்ள ஜோத்​பூரில் அமைக்​கப்​படு​கிறது.

ரூ.1 லட்​சம் கோடி தளவாடம்: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்கு பின்பு 12 கண்ணி வெடி போர்க்​கப்​பல்​கள், ரூ.44,000 கோடி மதிப்​பில் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட​வுள்​ளன. டிஆர்​டிஓ தயாரிக்​கும் தரையி​லிருந்து வான் இலக்​கு​களை தாக்​கும் ஏவு​கணை​கள், இஸ்​டார் என்ற கண்​காணிப்பு விமானங்​கள், கடற்​படை பயன்​பாட்​டுக்​காக உளவு பார்க்​கும் சிறிய ரக நீர்​மூழ்​கி​கள், போர்க்​கப்​பல்​களில் பயன்​படுத்​தப்​படும் 76 எம்​எம் துப்​பாக்​கி​கள் என ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் முப்படைகளுக்காக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய பாது​காப்​புத்​துறை அமைச்​சகம்​ வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here