Google search engine
குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் காணாமல் போனால், அதன் உரிமத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நாட்டில் குழந்தை கடத்தல் சம்பவம் அதிகளவில் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விபரத்தின்படி, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 2000 குழந்தை கடத்தல் வழக்குகள் பதிவாகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் தெலங்கானா,...
முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவின் ஹிசார் விமான நிலையத்தில் புதிய முனையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். அம்பேத்கரின் பிறந்த நாளில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் பேசியதாவது: பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என...
குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது....
இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர். இதுகுறித்து அதி​காரி ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் மோகன் கார்​டன், உத்​தம் நகர் பகு​தி​களில் போலீ​ஸார் மேற்​கொண்ட அதிரடி சோதனை​யில் விசா காலத்​துக்கு பிறகும் இந்​தி​யா​வில் தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினர் சிக்​கினர். இவர்​களில் 12 பேர் நைஜீரி​யா​வை​யும் இரு​வர் வங்​கதேசத்​தை​யும் ஒரு​வர் ஐவரி கோஸ்ட் நாட்​டை​யும் சேர்ந்​தவர்​கள்.சரி​பார்ப்​புக்கு பிறகு இவர்​களை நாடு கடத்த வெளி​நாட்​டினருக்​கான பிராந்​திய பதிவு...
குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ்...
தடை செய்​யப்​பட்ட ஐக்​கிய தேசிய விடு​தலை முன்​னணி (யுஎன்​எல்​எப்) அமைப்பை சேர்ந்த 2 தீவிர​வா​தி​களை மணிப்​பூர் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். கிழக்கு இம்​பால் மாவட்​டத்​தின் வெவ்​வேறு இடத்​திலிருந்து இவர்​கள் ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்​யப்​பட்​டனர். இதுதொடர்​பாக போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: அச்​சுறுத்தி பணம் பறிக்​கும் செயலில் ஈடு​பட்டு வந்த யுஎன்​எல்​எப் தீவிர​வாதி ஒரு​வர் கிழக்கு இம்​பால் மாவட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டார். அவரிட​மிருந்து ஒரு துப்​பாக்கி மற்​றும் தோட்​டாக்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதையடுத்து...
தெலங்கானாவில் காரில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள், கதவை திறக்க முடியாத காரணத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தெலங்கானாவின் ஹைதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், தாமரகட்டா பகுதியில் நேற்று ஒரு திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பல ஊர்களில் இருந்தும் உற்றார் உறவினர்கள் கார்களில் வந்திருந்தனர். இவர்களின் கார்கள் திருமண மண்டபத்துக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தன்மய் ஸ்ரீ (5), அபினய் ஸ்ரீ (4) எனும் சகோதரிகள் ஒரு காரில் ஏறி...
ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரோலில் தப்பிச் சென்றார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியபிரதேச மாநிலம் சிதி கிராமத்தை சேர்ந்தவர் அனில் குமார் திவாரி (58). ராணுவத்தில் டிரைவராக பணியாற்றி வந்த இவர் கடந்த 1989-ல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவரது உடலுக்கு தீவைத்தார். இதையடுத்து மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினார். எனினும் உண்மை வெளிப்பட்டு, ஆயுள் தண்டனை...
அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மின்னஞ்சல் வந்ததை தொடர்ந்து, அது தொடர்பாக போலீஸார் விசாரணை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த மின்னஞ்சலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆங்கிலத்தில் அனுப்பியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இருப்பினும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை ஊடகங்களுடன் காவல் துறையினர் பகிர்ந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக ராமர் கோயில் அறக்கட்டளை அல்லது பாதுகாப்பு அமைப்புகள் சார்பில்...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சட்டமேதை அம்பேத்கரின் திட்டங்கள், ஆசைகளை நிறைவேற்றத் தயாராக இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கார்கே பேசியதாவது: அம்பேத்கருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் வழங்கி வருகிறது. 1952-ல் அம்பேத்கர், மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பிரதமர்...