காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நேற்று ஆந்திர மாநிலம், மங்களகிரியில் உள்ள ஓர் அரங்கில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசியதாவது: மதம் குறித்து எதுவும் பேசாத சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்றாலும், அந்த தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பாகிஸ்தான் நாட்டுக்கும் இங்கு ஆதரவாக பேசுவது மிகவும் தவறு....
கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் 12 பேரை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன் தினம் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதனை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த 30 வயதான ஒருவர்...
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் 'எக்ஸ்' கணக்கை மத்திய அரசு நேற்று முடக்கியது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதற்கிடையில் 'ஸ்கை நியூஸ்' செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்...
ஆந்திரப் பிரதேசம் - விசாகப்பட்டினத்தின் சிம்மாசலம் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி புதன்கிழமை அதிகாலையில் இருந்தே தரிசனதுக்காக பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
புதிதாக கட்டப்பட்டு 20 நாட்களே ஆன அந்த 20 அடி...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் 6-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவ தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் உரி, நவுகம், ராம்பூர், கெரன், குப்வாரா, பூஞ்ச் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக இந்திய, பாகிஸ்தான் ராணுவ...
கனடாவில் வான்கூவர் விழாவுக்காக வீதியில் கூடிய கூட்டத்தின் மீது மோதிய கார் – பலர் உயிரிழப்பு
admin - 0
கனடாவின் வான்கூவரில் நேற்றிரவு நடந்த விழா ஒன்றில் கூட்டத்தில் கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வான்கூவர் போலீஸார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு E.41-வது அவென்யூவில் நடந்த விழா ஒன்றில் கூட்டத்தினர் மீது கார் மோதியதில் சிலர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் முடிவில் சம்பவம்...
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு மிக கடுமையான தண்டனை: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் உறுதி
admin - 0
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்புடையவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் நாட்டு மக்கள்...
‘‘நாங்கள் வைத்துள்ள 130 அணு ஆயுதங்கள் காட்சிக்கு அல்ல. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்’’ என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ...
உத்தர பிரதேசத்தில் நீதிபதி ஒருவரை தீர்ப்பு எழுத தகுதி இல்லை எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கான்பூர் நகரைச் சேர்ந்தவர் முன்னி தேவி. குத்தகை தொடர்பான இவரது வழக்கு ஒன்றில் கூடுதல் காரணங்களைச் சேர்க்க கோரிய மனுவை கூடுதல் மாவட்ட நீதிபதியான அமித் வர்மா தன்னிச்சையான முறையில் மூன்றே வரி உத்தரவில் தள்ளுபடி செய்தார். அத்துடன் மனு...
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள மோடி பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து வருகின்றனர்.
இது ஏற்கெனவே இப்பகுதியில் நிலவிய நிச்சயமற்ற...










