மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி நேற்று கேரள மாநில கும்பமேளா பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு வயலில் மட்டும் 570 வகையான நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இது விதைகளின் மரபைப் பாதுகாக்கும் பேரியக்கம் ஆகும். உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்திருக்கிறது.
15 கோடி டன்களுக்கும் மேலாக அரிசி உற்பத்தி செய்வது சாதாரண...
சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் நேற்று கூறியதாவது: மாற்று மதத்தினர் மற்றும் சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படமெடுக்கும் மும்பை தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கே சென்று கர்ணி சேனா தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
விரைவில் வெளியாக இருக்கும் "யாதவ் ஜி கி லவ் ஸ்டோரி" மற்றும் "கூஸ்கோர் பண்டட்" ஆகிய திரைப்படங்கள் மாற்று சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் உள்ளது. சத்ரிய, பிராமண சமூகங்களைக் குறிவைத்த...
மாவோயிஸ்டு இயக்கத்தின் கமாண்டர் தேவுஜி மற்றும் அவருடன் சேர்ந்து 20 பேர் போலீஸில் சரணடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் மாவோயிஸ்டு, நக்சல்களின் வன்முறையை அடுத்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். அதன்படி, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான என்கவுன்ட்டர்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர்...
நமோ பாரத் அதிவேக ரயில் வழித்தடம், அதிவேக மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
நாட்டின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பின் (RRTS), டெல்லி - மீரட் இடையிலான நமோ பாரத் வழித்தடத்தின் பெரும்பகுதி ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த மீதமுள்ள பகுதிகளை பிரதமர் நரேந்திர...
பாஜக மூத்த தலைவர் நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதனுடன் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் பிரதமர் நேரு உலகத்துக்கு நாகின் டான்ஸ் (பாம்பு நடனம்) காட்டினார், பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி உலகத்துக்கு தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை எடுத்துக் காட்டுகிறார்.
கோபம் வரத்தானே செய்யும்? இந்தப் படம் 1962ல் அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவி ஜாக்குலினை நேரு வரவேற்றபோது எடுத்தது”...
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. 4-ம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அதிபர்...
மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்த தமிழக அரசின் ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலவசத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடும். இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அறிஞர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் டி.ஹரிஷ்குமார் தாக்கல் செய்த...
பிஹாரில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் எஸ்ஐஆர் பணிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
இதன் படி ஆந்திரா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாத்ரா நாகர்...
கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள குனிகல் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ரங்கநாத் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கர்நாடகாவில் மண்டியா, துமக்கூரு, ஹாசன், ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்கள் யாரும் முன்வருவதில்லை.
இதனால் 35 வயதை கடந்த போதும், ஆண்கள் திருமணம் செய்யாமல் தனித்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் மணப் பெண்களை தேடி கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா...
ரம்ஜான் மாத நோன்பு நேரத்துக்காக மசூதிகளின் அன்றாட அறிவிப்பின் மீது தனது நிலைப்பாட்டை உத்தரப் பிரதேச அரசு தெளிவுபடுத்தியது. இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏவான கமல் அக்தர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து உ.பி சட்டப்பேரவையின் பூஜ்ஜிய நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவான கமல் அக்தர் எழுப்பிய கேள்வியில், “ஹோலி, தீபாவளி, தசரா, கன்வார் யாத்திரை மற்றும் கிறிஸ்தவ மற்றும் சீக்கிய கொண்டாட்டங்கள் உட்பட அனைத்து மதங்களின்...










