திரையில் தோன்றிய முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போடும் படங்கள் வெகு சில மட்டுமே உள்ளன. இயக்குநர் சீன் பேக்கரின் ‘அனோரா’ அத்தகைய படம்தான். 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 21, 2024 அன்று திரையிடப்பட்டு, பெரும் மதிப்புக்குரிய பாம் டி'ஓரை வென்றெடுத்தது.
நேஷனல் ஃபோர்டு ஆஃப் ரிவியூ மற்றும் அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆகிய இரண்டிலும் 2024-ஆம் ஆண்டின் சிறந்த...
“நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம்” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை....
சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘மாமன்’ என தலைப்பிடபட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிச.16) தொடங்கியது.
‘கருடன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூரி, ‘விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது. இதனையும் ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. திருச்சியில் இதன் படப்பூஜை இன்று காலை...
கடந்த ஆண்டே தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் நடிகை டாப்ஸி செய்வதில்லை. விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கூட புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில்லை. இந்த ஆண்டு தனது காதலர் மத்யாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது பேட்டியொன்றில் தனக்கு கடந்த ஆண்டே திருமணம் முடிந்துவிட்டதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் டாப்ஸி, “உண்மையில்,...
ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம், சூப்பர் ஹிட்டானது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடித்துவருகிறார். இதை யடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார், சிவகார்த்திகேயன்.
அவரது 25-வது படமான இதில் ஜெயம் ரவி வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்கின்றனர். அதர்வா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை,...
பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரானுக்கு (வாகை சந்திரசேகர்) திடீரென நினைவு திரும்புகிறது. ஊழல்வாதியான (சத்யசீலன்) ராதாரவி முதல்வராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனது விசுவாசியும் நேர்மையானவருமான ஞானோதயத்தின் (எம்.எஸ்.பாஸ்கர்) மகன் அமைச்சர் அருமை பிரகாசம் (கருணாகரன்) ஊழலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். சத்யசீலனுக்கு எதிராகக் கட்சி ஆரம்பிக்கிறார் கண்ணபிரான். ஆனால், ‘கேம் ஆப்’ மூலமாக மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை அள்ளலாம்...
முன்னாள் ரவுடியான ராஜாவின் (பரத்) காதல் மனைவி சிறுநீரக பிரச்சினை காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற ரூ.15 லட்சம் தேவைப்படுகிறது. தூய்மை பணியாளரான சாவித்திரி (அபிராமி) திருநங்கையாகிவிட்ட தனது மகனின் மருத்துவப் படிப்புக்கு வாங்கிய கடனுக்காகப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். திருமணமாகி கணவன் வீட்டுக்கு வரும் அஞ்சலி நாயருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சாதி வெறியரான நாதன் (தலைவாசல் விஜய்), தன் மகள் அனிதா (பவித்ரா) வேறு...
ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘அம்பி’. அவர் ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.பி. முரளிதரன் இசையமைத்துள்ளார். டி2 மீடியா சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை, பாஸர் ஜே எல்வின் தயாரித்துள்ளார்.
அவர் கூறும்போது, “இது ‘ஃபேமிலி டிராமா’ கலந்த காமெடி படம்....
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மோகன் பாபு. இவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் மனைவி வித்யா தேவியின் மறைவுக்கு பிறகு அவரது தங்கை நிர்மலா தேவியை மோகன் பாபு திருமணம் செய்தார். இவர்களுக்கு மஞ்சு மனோஜ் என்ற மகன் உள்ளார். நடிகர் மோகன் பாபுவுக்கு ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. சொத்து விவகாரம் தொடர்பாக மோகன் பாபுவுக்கும் மஞ்சு மனோஜுக்கும் இடையே பிரச்சினை...
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல் பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து...










