சூப்பர் ஹிட்டான ‘தி லயன் கிங்’ படத்தின் அடுத்த பாகமாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ என்ற படம் இப்போது உருவாகி இருக்கிறது. பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் டிச. 20-ல் வெளியாக இருக்கிறது. ஆதரவற்ற குட்டியான முஃபாசாவையும், அரச குடும்பத்தின் வாரிசான டாக்கா எனப்படும் அன்பான சிங்கத்தையும் சுற்றி இதன் கதைப் பின்னப்பட்டுள்ளது.
இதில் முஃபாசா கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ், ‘டாக்கா’வுக்கு அசோக் செல்வன் குரல் கொடுத்துள்ளனர்....
ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டகோயிட்’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மிருணாள் தாகூர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
ஷானில் டியோ இயக்கத்தில் ஆத்வி சேஷ் நடித்து வரும் படம் ‘டகோயிட்’ (DACOIT)’. இதில் நாயகியாக ஸ்ருதிஹாசனை வைத்து முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இது...
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் காண்பித்துள்ளனர்.
இதுகுறித்து இதன் இயக்குநர் அன்பு கூறும்போது, ‘‘இந்தப் படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் காண்பிக்கிறோம். அவர் கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும். விஜயகாந்த் நடித்த ‘பொன்மனச் செல்வன்’ படத்தில்...
தமிழில் ஹிட்டான ‘தெறி’ திரைப்படத்தின் இந்தி ரீ-மேக்கான ‘பேபி ஜான்’ திரைப்படத்தில் வருண் தவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை அட்லீ தயாரித்திருக்கிறார். விரைவில் திரையரங்கில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ‘புரமோஷன்’ வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது படக்குழு.
அப்படி ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ டிவி நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றிருந்தபோது, “நீங்கள் ஒரு நடிகரை முதன்முதலில் சந்திக்கும்போது, அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறார்களா?” என்று அட்லீயிடம் நிகழ்ச்சித்...
அனுஷ்கா நடித்துள்ள ‘Ghaati’ தெலுங்கு திரைப்படம் வரும் ஏப்ரல் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
அனுஷ்கா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘Ghaati’ என...
1984ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி கராத்தே கிட்’. ஒரு புதிய நகரத்துக்கு செல்லும் இளைஞன் ஒருவன் அங்குள்ள மற்ற இளைஞர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். அவன் மேல் பரிதாபம் கொள்ளும் முதியவர் ஒருவர் அந்த இளைஞனை மிகச்சிறந்த கராத்தே வீரனாக மாற்றுவதே இதன் கதை.
இதன் பிறகு 1984ல் இதன் அடுத்தடுத்த 2 பாகங்கள், இதனைத் தொடர்ந்து சில அனிமேஷன் தொடர்கள், 2010ஆம் ஆண்டு வில்...
“இன்னும் சில வாரங்களில் என்னுடைய புதிய படம் தொடங்க இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய ஆற்றல் தேவை என்றாலும் எங்களுக்கு நிறைய ஆசிர்வாதங்களும் தேவை. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மிகச்சிறந்த அறிவிப்புகள் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன” என்று இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.
அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேபி ஜான்’ திரைப்படம் வரும் டிச.25 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில்...
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ஹிட்டான படம், ‘தெறி’. இதில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வருண் தவண், கீர்த்தி சுரேஷ், வாமிகா, சான்யா மல்ஹோத்ரா என பலர் நடித்துள்ளனர். ஜீவா நடித்த ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்கியுள்ள இந்தப் படம் டிச.25-ல் வெளியாகிறது.
இதன் புரமோஷனில் கலந்துகொண்ட வருண்...
நயன்தாரா நடிப்பில், டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடன்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் ‘த ராஜா சாப்’ படத்தில் அவர் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதில் நயன்தாரா பங்குபெறும் படப்பிடிப்பு அடுத்த மாதம்...
டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் சூப்பர்மேன். இதனை அடிப்படையாகக் கொண்டு 70-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. கடைசியாக ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் நடித்திருந்தார்.
தற்போது டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்ததால் ஹென்றி கெவில் டிசி படங்களில் இருந்து வெளியேறி விட்டார். மார்வெல் நிறுனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன் தற்போது டிசி நிறுவனத்துக்காக...










