அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரிலீஸான முதல் 5 நாட்களில், உலக அளவில் ரூ.170 வசூலுடன், 2025-ல் அதிக வசூல் ஈட்டிய நம்பர் 1 தமிழ் திரைப்படம் என்ற சாதனையைத் தொடுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன்...
பிரபல இந்தி நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானுக்குப் படப்பிடிப்புக்குச் சென்றபோது, அரிய வகை மான்களை வேட்டையாடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிஷ்னோய் இன மக்கள், அந்த அரியவகை மான்களைப் புனிதமாகக் கருதுகின்றனர். இதனால் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது.
மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே, கடந்த ஆண்டு ஏப்ரல்...
தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏஆர்ஆர் இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச்...
ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டேன்லி, உடல்நலக்குறைவால் இன்று (ஏப்.15) காலமானார். அவருக்கு வயது 58.
கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தை இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அந்தப் படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தனுஷை வைத்து ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தை இயக்கினார். தொடர்ந்து ஸ்ரீகாந்தின் ‘மெர்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’...
வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் அட்வைஸ் செய்துள்ளார்.
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சில் ஒன்று நடைபெற்றது. அதில் ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி.பிரகாஷ், சுனில், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, முதலில் நண்பர் ஜி.வி.பிரகாஷுடன்...
பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் ‘ஸ்பிரிட்’. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தான் தொடங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
’ஸ்பிரிட்’ படத்துக்கு முன்னதாக, ‘ஃபாஜி’ மற்றும் ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களை முழுமையாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் பிரபாஸ்....
என்னை நம்பிய முதல் ஸ்டார் அஜித் தான் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் வெங்கட்பிரபு. அதில் அஜித் மற்றும் ‘மங்காத்தா 2’ குறித்த கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு, “’மங்காத்தா 2’ குறித்து தெரியவில்லை. ஆனால், அப்படத்தின் மீது அனைவருக்கும் ஆசை இருக்கிறது. அதன் 2-ம் பாகம் பண்ணலாமா அல்லது வேறு படம் பண்ணலாமா என்று தெரியவில்லை.
ஆதிக் ரவிச்சந்திரன்...
‘விஸ்வம்பரா’ டீஸரில் இடம்பெற்றது ஏஐ காட்சிகள் என்று இயக்குநரின் தந்தை அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வெளியானது ‘விஸ்வம்பரா’ படத்தின் டீஸர். இந்த டீஸரின் காட்சிகள் இணையத்தில் கடும் எதிர்வினைகளை சந்தித்தது. இந்த எதிர்வினையினால் பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படமும் தள்ளிவைக்கப்பட்டது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே மாற்றப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இப்படத்தின் இயக்குநர் வாஷிஸ்டாவின் தந்தை பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘விஸ்வம்பரா’ படத்தின் டீஸரில்...
‘குட் பேட் அக்லி’ வசூல் குறைவின்றி இருப்பதால், அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனை படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. முதல் நாளில் ரசிகர்கள் கொண்டாடினாலும், பலரும் இது ரசிகர்களுக்கான படம் என கருத்து தெரிவித்தார்கள். ஆனால், கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி...
’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம்.
ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட்...










