Google search engine
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூப்பர்மேன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரமான சூப்பர்மேனை அடிப்படையாகக் கொண்டு 70-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. கடைசியாக ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் நடித்திருந்தார். தற்போது டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்ததால் ஹென்றி கெவில் டிசி படங்களில் இருந்து வெளியேறி விட்டார். மார்வெல் நிறுனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’...
கார்த்தி நடித்த ‘சகுனி’ பட இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. 2012ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான படம் சகுனி. சந்தானம், ப்ரணிதா சுபாஷ், ராதிகா, நாசர் உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சங்கர் தயாள் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்படம் பல்வேறு காரணங்களால் தடைபட்டது....
இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட ‘லாபதா லேடீஸ்’ படம், போட்டியில் இருந்து வெளியேறியது. சர்வதேச அளவில் திரைப்படத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இதில் ‘சிறந்த சர்வதேச திரைப்படம்’ என்ற பிரிவுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து படங்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்தியாவில் இருந்து ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வமாக ஒரு படம் அனுப்பப்பட்டு வருகிறது. 97-வது ஆஸ்கர் விருதுக்கு ‘லாபதா லேடீஸ்’ என்ற இந்திப் படத்தை, இந்திய திரைப்படக்...
உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், 'யு.ஐ’. சயின்ஸ் பிக்‌ஷன் ஆக்‌ஷன் படமான இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கிலும் நாளை (டிச.20) வெளியாகிறது. இந்தப் படம் பற்றி உபேந்திரா கூறும்போது, “இது உளவியல், அரசியல் நையாண்டி படம். பல உருவகங்களுடன் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு...
நடிகை மஞ்சு வாரியர் தமிழில், தனுஷின் ‘அசுரன்', அஜித்தின் ‘துணிவு’, ரஜினியின் ‘வேட்டையன்’ படங்களில் நடித்தார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை 2’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது. இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகர் அஜித்குமார் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “அஜித்குமார் பல விஷயங்கள் பற்றிப் பேசுவார். அவர் பேசும்போது ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவருக்கு பைக் மீதிருக்கும்...
வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார். இது அவருக்கு இசை அமைப்பாளராக 100-வது படம். இதையடுத்து அவர் நன்றிதெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது: 2005-ம் ஆண்டில் தொடங்கியது எனது இசைப் பயணம். 2024-ம் ஆண்டில் 100-வது திரைப் படத்துக்கு இசை அமைக்கும் நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்....
இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்துக் கொள்ள இருக்கிறார். இதில் படத்தின் சர்ச்சைகள் குறித்து அவர் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ’வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும், இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப் பயணத்தையும் ஒரே விழாவாக நடத்த திட்டமிடப்பட்டு இந்நிகழ்வு இன்று (டிச.18) மாலை நடைபெறவுள்ளது. இதில் ‘வணங்கான்’ படக்குழுவினருடன் பாலாவுடன் பயணித்த பல்வேறு திரையுலகினரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்கள். இந்த...
குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பாட்டல் ராதா’ திரைப்படம் வரும் ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் சார்பில் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அவரது தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இதில் குரு சோமசுந்தரம்,...
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 3வது சிங்கிள் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள புதிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ்...
நடிகர் பிரபாஸ் இப்போது ‘தி ராஜா சாப்’ என்ற படத்​தில் நடித்து வருகிறார். மாருதி இயக்​கும் இந்த ஹாரர் காமெடி படத்​தின் படப்​பிடிப்​பில் அவர் காயமடைந்​துள்ளார். சண்டைக் காட்​சி​யில் நடிக்​கும் போது அவருடைய கணுக்​காலில் பலத்த காயம் ஏற்பட்​டதைத் தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்​டுள்​ளது. அவர் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்​டும் என மருத்​துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்​நிலை​யில் அவர் நடித்​துள்ள ‘கல்கி 2898 ஏடி’ ஜப்​பானில் அடுத்த ​மாதம் 3-ம்...