மின்னலே படத்தின் இசை வெளியீட்டு விழா 11.01.2001 அன்று நடைபெற்று 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு ரசிகப் பார்வை இது...
“ஹாரிஸ் ஜெயராஜுக்கு வந்து... நான் பெரிய ரசிகன். அவர் இளையராஜா மற்றும் ரகுமானின் கலவை. அந்தப் பாடல் இப்ப வரைக்கும் என்னுடைய விருப்பத்திற்குரிய பாடல் வரிசையில் இருக்கு” - இதைச் சொன்னவர் ‘எந்திர’னில் வசீகரனாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சொன்னது 2017 ‘காப்பான்’ திரைப்பட இசை...
‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78...
நான் நடிக்க வாய்ப்பு தேடும் போது எளிதாக எனக்கு கிடைத்து விடவில்லை. எப்படியாவது சினிமாவில் இருந்துதான் ஆக வேண்டும் என்று முடிவு செய்து தீவிரமாக முயற்சி செய்தும் பலனில்லை. அதற்காக ஒதுங்கி விடவும் மனமில்லை. நான் எங்கு சென்றாலும் சினிமாவே என் மனம் முழுவதும் இருந்தது.
நான் பல பேட்டிகளில் சொன்னது போல, ‘ஒரு படம் நடிச்சா ரெண்டு படம் ஃப்ரீ’ என்று கூட ஒரு திட்டத்தை அறிவிக்கலாம் என...
விஜய்க்கு ‘பகவந்த் கேசரி’ மிகவும் பிடித்த படம் என்று அதன் இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்.
’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்பது ட்ரெய்லர் வெளியான உடனே உறுதியாகிவிட்டது. இதனால் பலரும் அப்படத்தின் காட்சிகளை வைத்து கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி இது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.
தற்போது அனில் ரவிபுடி அளித்த பேட்டியொன்றில் ‘ஜனநாயகன்’ தொடர்பாக, “விஜய்க்கு ‘பகவந்த்...
‘பராசக்தி’ படத்துக்கு எதிராக பரப்பப்படும் வன்மம் குறித்து படக்குழுவினர் காட்டமாக பதிவிட்டுள்ளனர்.
ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’, ஜனவரி 10-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’ வெளியானது.
’ஜனநாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள்...
நடிகர் அஜித்குமார், ‘குட்பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். கடந்த ஆண்டு, அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தய போட்டிகளில் தனது அணியினருடன் கலந்து கொண்ட அவர் இப்போது, 24 ஹெச் சீரிஸ்- மத்திய...
‘வா வாத்தியார்’ பிரச்சினைக்கு முடிவு எட்டப்பட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியிடும் வகையில் வெளியீட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. ரூ.21 கோடி செலுத்திவிட்டு படத்தினை வெளியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இப்பணத்தினை தயார் செய்துவிட்டார் என்கிறார்கள். இதனாலேயே...
‘ஜனநாயகன்’ வெளியீடு இல்லை என்பது உறுதியானதால், பொங்கல் வெளியீட்டுக்கு பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன.
ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையினால் தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆனால், பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.
இதனால், பல்வேறு படங்கள் ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகள் வெளியாக இருக்கின்றன. கார்த்தி...
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால்வெளியாகவில்லை. இந்தப் படத்தைப் பொங்கலுக்கு வெளியிடும் முயற்சியில், படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அப்படம் வெளியாகுமா, ஆகாதா என்ற நிலையில், விஜய் நடித்து வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களை ரீரிலிஸ் செய்ய சில தயாரிப்பாளர்கள் முயன்று வந்தனர்.
இந்நிலையில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்தைப் பொங்கலுக்கு மறுவெளியீடு செய்வதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.
அட்லி...
தனுஷின் ‘மரியான்’ படப்பிடிப்பில் தான் மோசமான அனுபவத்தைச் சந்தித்ததாக நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான பார்வதி, தமிழில் வெளியான ‘பூ’, ‘மரியான்’, உத்தம வில்லன்’, ‘தங்கலான்’ உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தனுஷின் ‘மரியான்’ பட ஷூட்டிங்கின் போது தன்னை உடை மாற்ற அனுமதிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “’மரியான்’ படத்தின் ஒரு காட்சியில் தண்ணீரில் முழுவதுமாக...
