‘சினிமா என்பது கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான ஒன்று’ என்கிறார் பிரெஞ்சு புதிய அலை திரைப்பட இயக்கத்தின் முன்னோடி, கோதார்த். அவர் சொல்வது போல கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஏராளம் உண்டு. இந்த ‘ஏராள’த்தில் உருவாகும் சினிமா கதைகள், கற்பனைக்கு உட்பட்டதும் அதற்கு அப்பாற்பட்டதுமாக இருக்கின்றன. அப்படி உருவான திரைப்படங்களில் 1930-ல் இருந்து 1960-க்குள் வெளியான ‘எட்ஜ் ஆஃப் தி சீட்’ என்றழைக்கப்படும் கிளாசிக் குற்றப் படங்கள் பற்றி இங்கு...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தொடங்கியுள்ளது.
தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தனிப்பட்ட காரணங்களால் விலகவே, கடந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் இன்று...
நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.
கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். ‘கூலி’ படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், தற்போது ஒரு வார...
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கதை சொன்னேன். அவர்களுக்கு பிடித்துப் போனதால் உடனே...
என் ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது.
இதனிடையே தனியார் ஊடகம் ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தைம் தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு...
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை ராமர் மேற்கொண்டுள்ளார். பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.
இப்படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் 'முண்டாசுபட்டி' ராமதாஸ், 'நண்டு' ஜகன்,...
தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு அக். 4-ம் தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. நடிகர் மோகன் லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது செப்.23-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து மோகன் லாலை கவுரவிக்கும் விதமாக கேரள அரசின் சார்பில் அக். 4-ம் தேதி ‘மலையாளம் வனோலம், லால் சலாம்’ எனும் பெயரில் பாராட்டு...
அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘வீர தமிழச்சி’. இதில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மாரிமுத்து, வேலராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். மகிழினி கலைக்கூடம் சார்பில் சாரதா மணிவண்ணன், மகிழினி இணைந்து தயாரித்துள்ளனர்.
இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்...
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘கந்தாரா: சாப்டர் 1’ படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தபோது, ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் பேசினார். அப்போதுதான் என் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேச முடியும் என்றார். இதற்குத் தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தெலுங்கு மொழியைத் தெரிந்துகொண்டே அவர் பேசாமல் சென்றுவிட்டார் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கெனவே பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளியீட்டின்...
பிரபாஸ் நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - மூன்றரை நிமிடங்களுக்கு மேல் ஓடியும் கதை இன்னதுதான்...










